இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது தடுமாறி வருவது குறித்தும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்குவது குறித்தும் இந்திய லெஜெண்ட் கபில் தேவ் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை வென்று இந்திய அணி அபாரமாக ஆரம்பித்தது. அதே சமயத்தில் இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு சென்று இருக்கிறது.
ஜாம்பவான் வீரர்களின் சரிவு
தற்போது இந்திய பேட்டிங் யூனிட்டில் மிகப்பெரிய வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் சுமாரான பேட்டிங் இருந்து வருகிறார்கள். குறிப்பாக ரோகித் சர்மா பேட்டிங் மிகவும் சுமாராக இருக்கிறது. விராட் கோலி பெர்த் டெஸ்டில் சதம் அடித்திருந்தால் கூட, அவருடைய பேட்டிங் அணுகுமுறை நம்பிக்கை அளிப்பதாக இல்லை.
இந்திய அணியின் இரண்டு பெரிய வீரர்கள் பேட்டிங் ஃபார்ம் நிரந்தரமாக இல்லாமல் இருந்து வருவது இந்திய அணிக்கு பெரிய அளவில் பின்னடைவுகளை உருவாக்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முதல் இன்னிங்ஸில் இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்த விதம் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
விராட் கோலியின் கையில் இருக்கிறது
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் கபில் தேவ் கூறும் பொழுது “விராட் கோலி நம் நாட்டில் பார்த்த சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அவர் நான்கு சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் வரக்கூடியவர். அவர் தற்போது மிகவும் கடினமான நிலையில் இருக்கிறார் என்றால் அவர் மீண்டு வருவது என்பது அவரது கைகளில்தான் இருக்கிறது. அவர் எவ்வளவு சீக்கிரத்தில் மீண்டு வருவார் என்பது அவரைப் பொறுத்தது”
இதையும் படிங்க : ஹெட்டுக்கும் முன்னாள் கோச் லாங்கருக்கும் பிரச்சனை இருந்தது.. இந்த அதிரடிக்கு காரணமே வேற – டிம் பெயின் கருத்து
“பும்ராவுக்கு கேப்டன் பதவி என்பது குறித்துபேசுவது மிகவும் சீக்கிரம் என்று நினைக்கிறேன். ஒரு பெர்ஃபார்மன்ஸ் வைத்து தகுதியானவர் தகுதி இல்லாதவர் என்று கூறக்கூடாது. ஒரு நிறைய கிரிக்கெட் விளையாடட்டும் பின்பு கேப்டனாக வரட்டும். ஏற்றத்தாழ்வுகள் என்பது கிரிக்கெட்டில் வரக்கூடியது. இதில் ஒருவர் தன்னுடைய மோசமான காலத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதை வைத்து தான் அவரை மதிப்பிட வேண்டும். நல்ல காலத்தை வைத்து கிடையாது” என்று கூறி இருக்கிறார்.