யாருமே வேணாம்னு நெனச்ச கேன் வில்லியம்சனை எதுக்காக 2 கோடிக்கு எடுத்தோம்? – ஆஷிஷ் நெக்ரா பேட்டி!

0
1227

எந்த அணியும் எடுக்க முன் வராத கேன் வில்லியம்சனை எதற்காக எடுத்தோம் என்று விளக்கம் அளித்திருக்கிறார் ஆஷிஷ் நெக்ரா.

2023 ஐபிஎல் தொடருக்கான சிறிய அளவிலான ஏலம் கொச்சியில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஏலம் பல்வேறு ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் இருந்தது.

- Advertisement -

சாம் கர்ரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பல கோடிகளுக்கு போட்டி போட்டுக்கொண்டு எடுக்கப்பட்டனர். அதே நேரம் அனுபவம் மிக்க கேன் வில்லியம்சன் ஆரம்ப விலைக்கே எவரும் கேட்க முன்வரவில்லை. கடைசியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு எடுத்தது.

இப்படிப்பட்ட அனுபவம் மிக்க வீரரை ஏன் பல்வேறு அணிகள் எடுக்க முன்வரவில்லை? அந்த சூழலில் எதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை எடுத்தது? என பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியில், அவர் எந்த இடத்தில் விளையாட வைக்கப்படுவார்? ஏற்கனவே அந்த அணியில் அந்தந்த இடத்திற்கு முன்னணி வீரர்கள் இருக்கின்றனரே எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு தனது பேட்டியில் பதில் கொடுத்திருக்கிறார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஸ் நெக்ரா.

- Advertisement -

கேன் வில்லியம்சன் போன்ற வீரர் தனது திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை அனைவரும் அவரைப் பற்றி நான்கு அறிவார் அதீத அனுபவமும் பெற்று இருக்கிறார் இரண்டு ஐபிஎல் சீஷன்கள் சரியாக அமையவில்லை என்பதற்காக அவரை நாங்கள் குறைத்து எடை போட முடியாது அவருடைய அனுபவத்தை போதிய வரை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்

எங்கள் அணியை பொறுத்தவரை அனுபவம் மற்றும் இளமை இரண்டும் கலந்த அணியாக தான் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறோம். அந்த வகையில் கேன் வில்லியம்சன் தனது முழு அனுபவத்தையும் அணிக்காக கொண்டு வருவார் என்று நம்புகிறோம். குறிப்பாக டாப் ஆர்டரில் இவரை போன்ற அனுபவம் மிக்க வீரர் இருப்பது எங்களுக்கு கூடுதல் பலம் தான். அதிரடிக்கு அதிரடியாகவும் நிதானத்திற்கு நிதானமாகவும் இருக்கக் கூடியவர். இவரை நம்பர் 3 இடத்தில் விளையாட வைப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறோம்.” எனவும் பேசினார்.