இந்திய கிரிக்கெட்

இந்திய அணி சீப்பாக நடந்து கொண்டது.. உலக கிரிக்கெட் நாடுகள் உடனே ஒன்று சேர வேண்டும் – கம்ரன் அக்மல் பேட்டி

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நடந்து கொண்ட விதத்திற்காக உலக கிரிக்கெட் நாடுகள் ஒன்று கூடி இந்திய கிரிக்கெட் வாரியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் ஆசிய கோப்பை கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிராக ஆடக்கூடாது

இதுகுறித்து கம்ரன் அக்மல் பேசும் பொழுது ” இந்திய அணிக்கு எதிராக இனி நாங்கள் ஒருபோதும் விளையாட மாட்டோம் என உடனடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொல்ல வேண்டும். இதற்கு ஐசிசி என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கலாம். இந்திய கிரிக்கெட் வாரியத்தை தண்டிப்பதற்கு இதைவிட வேறு ஆதாரங்கள் எதுவுமே தேவை கிடையாது”

“ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த ஒருவர் ஐசிசி தலைவராக இருந்து வருகிறார். எனவே அவர் நடவடிக்கை எடுக்க மாட்டார். இந்த நிலையில் மற்ற கிரிக்கெட் நாடுகள் அனைத்தும் இதில் ஒன்று சேர வேண்டும். கிரிக்கெட் யாருடைய சொந்த நாட்டிலும் விளையாடப்படுவது கிடையாது. எனவே மற்ற அணிகளுடன் சேர்ந்து விளையாடினால் தான் பணத்தை சம்பாதிக்க முடியும்”

- Advertisement -

நடுநிலை அமைப்பு தேவை

“இதை உடனடியாக எவ்வளவு சீக்கிரம் கட்டுப்படுத்த முடியுமோ அதை செய்ய வேண்டும். பாகிஸ்தான் இல்லாமல் ஒரு நடுநிலையான அமைப்பை உருவாக்க வேண்டும். அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த வீரர்கள் இடம் பெற வேண்டும். ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் என்ன நடந்தது என்பது குறித்து இவர்கள் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இதையும் படிங்க : ரொம்ப நன்றி ஹாரிஸ் ரவுப்.. நீங்க இல்லாம இது நடந்திருக்க வாய்ப்பில்ல.. மறக்க முடியாது – அஸ்வின் பேச்சு

“இந்தியாவிடம் இருந்து இப்படியான சீப்பான நடவடிக்கையை நாம் தொடர்ந்து பார்ப்போம். அவர்கள் ஆசிய கோப்பையில் கிரிக்கெட்டுக்கு எவ்வளவு சேதாரத்தை உருவாக்க முடியுமோ அவ்வளவு செய்திருக்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சரியான முடிவை எடுத்திருக்கிறார். இந்தியா சீக்கிரத்தில் உலகக் கிரிக்கெட்டில் நகைச்சுவையாக மாறப்போகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts