நடந்து முடிந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக ஹாரிஸ் ரவுப் இருந்துள்ளார் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இந்த தொடரில் இரண்டாவது சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போது ஹாரிஸ் ரவுப் செய்த சில சர்ச்சையான சைகைகள் பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் அவர் காலத்தில் மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். இதுவெல்லாம் சேர்ந்து அவர் இறுதிப் போட்டியில் என்ன செய்வார்? என்கின்ற எதிர்பார்ப்புகளை இருபக்கமும் ஏற்படுத்தியிருந்தது.
16 பந்தில் 40 ரன்கள்
இந்திய அணியின் வெற்றிக்கு ஆறு ஓவர்களில் 67 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த ஆறு ஓவர்களில் மூன்று ஓவர்களை ஹாரிஸ் ரவுப் வீசினார். இதில் இந்திய அணி 16 பந்துகளை சந்தித்து விளையாடி மொத்தம் 40 ரன்கள் எடுத்து விட்டது. பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு இருந்த ஒரு வாய்ப்பை முழுவதுமாக ஹாரிஸ் ரவுப் கெடுத்துவிட்டார்.
அவர் முதலில் வீசிய இரண்டு ஓவர்களில் முதல் ஓவரில் 17 ரன்கள் வந்தது. அதில் திலக் வர்மா ஒரு சிக்ஸர் அடித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் வீசிய இரண்டாவது ஓவரில் 13 ரன்கள் வந்தது. அந்த ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் அவர் 7 ரன்கள் மட்டுமே தந்து இருந்தார். ஆனால் கடைசிப் பந்தை ஃபுல் டாஸ் ஆக வீச சிவம் துபே சாதாரணமாக சிக்ஸர் அடித்து முடித்தார்.
அவருக்கு ரொம்ப நன்றி
இந்த நிலையில் ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஹாரிஸ் ரவுப் உதவி உள்ளதாக கூறி ரவிச்சந்திரன் அஸ்வின் நகைச்சுவையாக அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: 83 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. கெத்தாக தொடரை கைப்பற்றிய நேபாள்.. வரலாற்றில் மாபெரும் சம்பவம்
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “திலக் வர்மா முழுவதுமாக கவனத்தை ஈர்த்தார். அவருடைய நரம்புகள் பனியால் ஆனது என்பதை காட்டினார். அவ்வளவு கூலாக விளையாடினார். மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது, இந்திய அணியும் சிக்கலில் இருந்தது. இந்த நிலையில் ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு மிக உதவியாக அமைந்தது. அவருக்கு ரொம்ப நன்றி” என்று கூறியிருக்கிறார்.






