தற்போது டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவதற்கு பங்களாதேஷ் அணி இந்தியா வர மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் பேசியிருக்கிறார்.
தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஐசிசி அமைப்பிடம் இந்தியா செல்ல முடியாது என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் ஐசிசி இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது இந்தியா பங்களாதேஷ் இடையே உறவு விரிசல் அடைந்திருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரில் பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிஷேர் ரஹ்மான் பங்கேற்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இது இன்னும் நிலைமையை சிக்கலாகிவிட்டது.
இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய போட்டிகளை இந்தியாவில் வந்து விளையாட முடியாது என ஐசிசி அமைப்பிடம் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம், போராடி வருகிறது. இந்த நிலையில் ஐசிசி இது சம்பந்தமாக இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. ஒருவேளை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருந்தால், அந்த அணி டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டு ஸ்காட்லாந்து உள்ளே கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து கம்ரன் அக்மல் பேசும்பொழுது “எந்த ஒரு கிரிக்கெட் வாரியமும் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகும் என்று நான் நினைக்கவில்லை. மேலும் பங்களாதேஷ் அணிக்காக பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்காமல் போகாது. இதில் எந்த அர்த்தமும் கிடையாது. இந்த விஷயத்தை நம்மால் கையாள முடியாதா? இது மிகவும் நுணுக்கமானது”
இதையும் படிங்க: நியூசிலாந்து கூட தோத்தது பிரச்சினையே கிடையாது.. ஜாலியா இருங்க.. முக்கிய காரணம் இதுதான் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி
“இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறுதியாக என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். அப்படி ஏதாவது அறிக்கைகள் வந்தால் மட்டுமே நாம் அதற்கு பதில் சொல்ல முடியும்” என்று கூறி இருக்கிறார்.