தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் மீண்டும் தங்களது உச்சநிலையை எட்டுவதற்கான பெரிய முயற்சியில் இறங்கி இருக்கிறது. தற்போது வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் ககிசோ ரபாடா ஜாக் காலிஸை தாண்டி புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
தற்போது தென் ஆப்பிரிக்க அணி டெம்பா பவுமா தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தற்பொழுது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 357 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 233 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா 18 ஓவர்கள் பந்து வீசி 3 மெய்டன்கள் செய்து 56 ரன்கள் விட்டுத் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதில் அவர் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பொழுது தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஜாக் காலிஸை தாண்டி ஆறாவது இடத்தை பிடித்தார். ஜாக் காலிஸ் 165 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 291 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ரபாடா ஒரு பந்துவீச்சாளராக மட்டும் விளையாடி வெறும் 63 போட்டிகளில் 294 விக்கெட்டுகள் கைப்பற்றி தாண்டி இருக்கிறார்.
மேலும் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் 93 போட்டிகளில் 439 விக்கெட்டுகள் கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றியவராக முதல் இடத்தில் இருக்கிறார்.
தற்போது ரபடாவுக்கு 29 வயதுதான் ஆகிறது. மேலும் அவர் 30 முதல் 40 டெஸ்டுகள் விளையாட முடியும் என்றால், அவரால் டேல் ஸ்டெய்ன் சாதனையை முறியடித்து, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக உயர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே இருக்கிறது.
இதையும் படிங்க : அப்ப சச்சின் இப்ப விராட்.. ஒன்னா சேர்ந்து சிரிச்சேன் அழுதேன் – இந்திய ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஸ் பேட்டி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் :
டேல் ஸ்டெய்ன் – 93 போட்டி – 439
ஷான் பொல்லாக் – 128 போட்டி – 423
மகாயா நிடினி – 101 போட்டி – 390
ஆலன் டொனால்ட் – 72 போட்டி – 330
மோர்னே மோர்கல் – 86 போட்டி – 309
ககிசோ ரபாடா – 63 போட்டி – 294
ஜாக் காலிஸ் – 165 போட்டி – 291