அப்ப சச்சின் இப்ப விராட்.. ஒன்னா சேர்ந்து சிரிச்சேன் அழுதேன் – இந்திய ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஸ் பேட்டி

0
120
Sreejesh

தற்போது பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது. இந்த ஒலிம்பிக் உடன் 36 வயதான கேரளாவைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஸ் சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். இந்த நிலையில் தன் ஓய்வு குறித்து மிக உருக்கமான முறையில் பேசி இருக்கிறார்.

இந்திய ஹாக்கி அணி இந்த முறை தங்கம் வெல்லும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. திடீரென தங்களின் சிறப்பான செயல்பாட்டால் இந்த முறை ஒலிம்பிக்கில் ஆரம்பத்தில் இருந்து இந்திய ஹாக்கி அணியினர் நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அரையிறுதியில் ஜெர்மன் அணியிடம் தோல்வி அடைந்ததால் வெண்கல பதக்கத்திற்கு வந்தார்கள்.

- Advertisement -

இந்திய ஹாக்கி அணியினர் வெண்கல பதக்கம் வென்றாலும் கூட ஒட்டுமொத்த செயல்பாட்டு அளவில் மிகப்பெரிய அளவில் இந்திய ஹாக்கி அணியில் முன்னேற்றம் காணப்படுகிறது. எதிர்காலத்தில் மீண்டும் ஹாக்கியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் தெரிகிறது.

தற்போது இது குறித்து பேசி இருக்கும் ஓய்வு பெற்ற கோல்கீப்பர் ஸ்ரீஜேஸ் கூறும் பொழுது “என் ஓய்வின் காரணமாக இந்திய ஹாக்கி அணியில் கோல்கீப்பர் இடத்திற்கு வெற்றிடம் இருக்காது. நிச்சயம் ஒரு இளம் வீரர் அங்கு வருவார். எல்லா விளையாட்டுகளுக்கும் இது பொருந்தும். கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் சச்சின் இருந்தார் இப்பொழுது விராட் கோலி வந்திருக்கிறார்.கூடிய விரைவில் என் இடத்திற்கு ஒரு இளைஞர் வந்து விடுவார்.

உண்மையில் ஜெர்மனி அணியிடம் அரையிறுதியில் தோற்றது ஏமாற்றம் அளித்தாலும் கூட, ஒரு பதக்கத்துடன் நாடு திரும்பும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் ஹாக்கியை வளர்ப்பதற்கு ஹாக்கி இந்தியா லீக் தொடர் மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இதனால் இளைஞர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க பெரிய தளத்தை பெறுகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : GT20.. சூப்பர் ஓவரில் ஆட மறுத்த ஷாகிப்.. வெளியேற்றப்பட்ட பங்களா டைகர்ஸ் அணி.. நடுவர் எடுத்த சர்ச்சை முடிவு

இந்திய ஹாக்கி அணிக்காக இந்த 22 வருட பயணம் மிக நீண்டது. முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணிக்கு கேம்ப் போனதிலிருந்து நான் இவர்களுடன்தான் இருக்கிறேன். எனக்கு ஹாக்கியை தவிர வேறு எதுவும் தெரியாது. ஏதோ திரும்பிப் பார்த்தால் வாழ்க்கையை தவற விட்டு விட்டதாக தோன்றுகிறது. வெல்லும் பொழுது இவர்களுடன் சேர்ந்து சிரித்தேன், தோற்கும் பொழுது அழுதேன். இப்படித்தான் வாழ்க்கையே இருந்திருக்கிறது. இனி மேற்கொண்டு வீடு திரும்பி குடும்பத்தினருடன் சேர்ந்து முடிவுகள் எடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.