“ரோகித் சர்மாவுக்கு ஒரு நியாயம்.. இந்த 31வயது இந்திய வீரருக்கு ஒரு நியாயமா?” – முன்னாள் ஓபனர் கேள்வி!

0
100
Rohit

2021 ஆம் ஆண்டு யுனைடெட் அரபு எமிரேடில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி மிக மோசமாக தோற்று முதல் சுற்று உடன் வெளியேறி வந்தது.

இதற்கு அடுத்து கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் அவரவர் பொறுப்புகளில் இருந்து விலகிக் கொண்டார்கள்.

- Advertisement -

தொடர்ந்து கேப்டனாக ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருவரும் இந்திய அணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

இந்த ஜோடி முதலில் சந்தித்த பெரிய ஐசிசி தொடராக ஆஸ்திரேலியாவில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடர் அமைந்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இடம் தோல்வி அடைந்து இந்தியா வெளியேறியது.

மேலும் குறிப்பிட்ட இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் பேட்டிங்கில் சரியாக செயல்பட முடியாமல் தடுமாறினார்கள். இவர்களின் தடுமாற்றம் ஒட்டுமொத்த இந்திய அணியின் வெற்றியையும் பாதித்தது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள். இருந்தபோதிலும் ரோகித் சர்மா மற்றும் கேஎல்.ராகுல் உடன் சேர்த்து விராட் கோலியையும் கடந்த ஒரு ஆண்டாக டி20 இந்திய அணியில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சேர்க்கவில்லை. தற்பொழுது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்திய டி20 அணிக்குள் வந்திருக்க, கேஎல்.ராகுல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து இது அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” உங்களுடைய மூத்த வீரர்கள் அணிக்கு திரும்பும் பொழுது, ரோகித் சர்மாவை மையமாக வைத்து அணியை உருவாக்கும் பொழுது, அந்த இடத்தில் கேஎல்.ராகுல் இருந்தால் என்ன? அவர் என்ன பெரிய தவறு செய்து விட்டார்.

2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் கேஎல்ராகுல் இருவருமே சிறப்பாக செயல்பட்டார்கள். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருவரது பெயர்களுமே இருந்திருக்க வேண்டும். தற்பொழுது கேஎல்.ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார். ஆனால் தற்பொழுது ரோகித், விராட் கோலி இருக்கிறார்கள் கேஎல்.ராகுல் இல்லை. கடந்த ஒரு வருடமாக நீங்கள் அவரை சேர்க்க விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறார்!