“கொஞ்சம் வாய மூடிட்டு போறியா* ….. ஜோஸ் பட்லரின் பதிலால் அதிர்ந்த பயிற்சியாளர் ராஜா மணி!

0
22119

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உடற்பகுதி பயிற்சியாளராக இருந்து வருபவர் ராஜா மணி. இந்தியாவின் மிகச்சிறந்த உடல் தகுதி பயிற்சியாளர்களில் ஒருவராக விளங்கும் இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த சில சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு உடற் பகுதி பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் .

இந்த வருட ஐபிஎல் சீசனின் போது இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வினுடன் அவரது யூடியூப் சேனலில் அறிமுகமாகி பிரபலமானார் . இதனைத் தொடர்ந்து பல்வேறு செய்தி சேனல்களும் இவரைப் பேட்டி எடுத்து வருகின்றனர் .

- Advertisement -

அவரும் கிரிக்கெட் வீரர்கள் உடனான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதன்முதலாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது சர்வதேச வீரர்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமீபத்திய ஒரு பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் ராஜா மணி .

இவர் இந்தியாவைச் சார்ந்த அணிகளுக்கு மட்டுமல்லாது மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் உடல் தகுதி பயிற்சியாளராக பணியாற்றி வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இவரிடம் தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுத்த பல சர்வதேச வீரர்களும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன்மான டூப்லசிஸ் இவரிடம் தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . ஸ்ட்ரென்த் அண்ட் கண்டிஷனிங் பிரிவில் சர்வதேச அளவில் மிகச்சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக இவர் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியின் வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் எல் பாலாஜி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கும் இவர் பயிற்சி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது . ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முதன் முதலாக இவர் சேர்ந்த போது ஜோஸ் பட்லரை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்த சென்று இருக்கிறார் . அப்போது இவரைப் பார்த்த ஜோஸ் பட்லர் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு இரு என சைகையில் தெரிவித்துள்ளார் . இது தனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்ததாகவும் ராஜாமணி தெரிவித்திருக்கிறார் .

பின்னர் சிறிது நேரம் கழித்து ஜோஸ் பட்லரே இவரை அழைத்து நீதான் ஸ்ட்ரென்த் அண்ட் கண்டிஷனிங் கோச் என்று தெரியும் எனக்கு ஏதேனும் தேவைப்பட்டால் உன்னை அழைத்து தெரிந்து கொள்கிறேன் என கூறி இருக்கிறார். அதன் பிறகு இவருடன் உரையாடிய பட்லர் இவருடைய பயிற்சி முறைகள் மற்றும் அணுகுமுறைகளை வெகுவாக பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார் ராஜா மணி .