“ஒரு நேரத்தில் ஒரு அடி மட்டுமே.. கோலி இன்னும் முடிக்கவில்லை!” – கங்குலி மனம் திறந்த பாராட்டு!

0
3090
Virat

மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் முதல் அரைஇறுதி போட்டியில் விளையாடிய வருகின்றன.

இன்று நடைபெறுகின்ற போட்டியில் முதலில் தாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. ரோகித் சர்மா அதிரடியாக 47 ரன்கள் எடுக்க கில் 80 ரன் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பொறுப்பை எடுத்துக் கொண்ட விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதத்தை அடித்தார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்து இருந்த சச்சினின் சாதனையை முறியடித்தார்.

விராட் கோலி இந்த போட்டியில் 113 பந்துகளை சந்தித்து ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 117 ரன்கள் எடுத்து அசத்தினார்.

மேலும் ஒரு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் மற்றும் ஒரே உலகக்கோப்பை தொடரில் 50 ரன்களுக்கு மேல் அதிக முறை அடித்தவர் என்கின்ற இரண்டு கூடுதல் சாதனைகளையும் படைத்தார்.

- Advertisement -

விராட் கோலியின் சாதனை குறித்து பேசி உள்ள இந்தியாவின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறும் பொழுது “இது ஒரு சிறந்த இன்னிங்ஸ் மற்றும் 50 சதங்கள் என்பது தனித்துவமானது. ஒருநாள் போட்டிகளில் இது மிகவும் அபாரமான ஒரு சாதனை.

இந்த சாதனையை யாராவது உடைப்பார்களா என்றால் அது எனக்கு தெரியாது. ஆனால் இதற்கு நிறைய செய்ய வேண்டும். மேலும் விராட் கோலி இன்னும் முடிக்கவில்லை. அவர் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இந்தியா நன்றாக விளையாடி வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயரும் சதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் இந்தியா ஜெயிக்கட்டும் பிறகு இறுதிப் போட்டி குறித்து பேசலாம். ஒரு நேரத்தில் ஒரு அடி மட்டுமே சரி. அணியில் ரோகித் உட்பட எல்லா வீரர்களுமே நன்றாக விளையாடி வருகிறார்கள். பந்துவீச்சில் வேகம் மற்றும் சுழல் என எல்லாமே சிறப்பாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!