உலகக் கோப்பைக்கு வெறும் 2 வாரம்.. இந்தியா வர பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் சிக்கல்.. பிளான்களை மாற்றிய நிர்வாகம்!

0
3885
Pakistan

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளில் ஒரு அணியாக பாகிஸ்தான் அணி இருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடைசியாக 2012 மற்றும் 13 ஆம் ஆண்டு, இரு நாடுகளுக்கு இடையேயான தனிப்பட்ட கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இதற்கு அடுத்து ஒரு தசாப்தமாக இரு அணிகளுக்கு இடையே தனிப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது இல்லை.

- Advertisement -

மேலும் இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட டி20 உலக கோப்பைக்கு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்திருந்தது. அதற்குப் பிறகு பாகிஸ்தான் அணி இதுவரை இந்தியாவிற்கு வரவில்லை.

மேலும் தற்போது இந்தியாவிற்கு வர இருக்கும் பாகிஸ்தான் அணியில் இரண்டு பேர் மட்டும்தான் இதற்கு முன்பாகவும் இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறார்கள். ஒருவர் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் முகமது நவாஸ், மற்றொருவர் அவரைப்போலான ஆகா சல்மான்.

மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வருகின்ற வெள்ளிக்கிழமை பயிற்சி போட்டி நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி போட்டிக்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுகின்ற காரணத்தினால், ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மூடிய கதவுகளுக்கு பின்னால் நடக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி நிர்வாகம் வீரர்கள் கலந்து நல்ல புரிதலுடன் இருப்பதற்காக, இந்தியா வருவதற்கு முன்பாக துபாய்க்கு ஒரு சிறு பயணத்தை இரண்டு நாட்களுக்கு யோசித்து இருந்தது. மேலும் அங்கிருந்து ஹைதராபாத் வர திட்டம் செய்திருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கான விசா தற்பொழுது தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் அந்த துபாய் பயணத்தை ரத்து செய்து இருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பாகவே விசாவுக்கு விண்ணப்பித்து விட்ட நிலையில், சரியான நேரத்திற்குள் வந்துவிடும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.

இதில் மிகக் குறிப்பாக பார்க்க வேண்டிய விஷயம் என்றால், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இந்தியா வரும் ஒன்பது அணிகளில் பாகிஸ்தான் அணிக்கு மட்டுமே இன்னும் விசா தரப்படவில்லை என்பதுதான். தற்பொழுது இந்தச் செய்தி சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது!