ஓய்வுக்கு வெறும் 2 மாதம்.. தோனியின் 12 வருட தனித்துவ சாதனையை காலி செய்த குயின்டன் டிகாக்.!

0
834

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 393 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா 269 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்த போட்டியில் 123 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர். நேற்றைய போட்டியில் இவர் செய்திருக்கும் ஒரு சாதனை மட்டும்தான் தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது. நேற்று அவர் புரிந்த சாதனையின் மூலம் இலங்கை அணியின் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் சங்ககாரா மற்றும் இந்திய அணியின் லெஜெண்ட் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஆடம் கில்கிரிஸ்ட் ஆகியோருடன் சாதனை பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

மேலும் நேற்றைய போட்டியில் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்எஸ் தோனியின் 12 வருட சாதனையை சாதனையை முறியடித்து இருக்கிறார் . நேற்றைய போட்டியில் டிகாக் 141 இன்னிங்ஸ்களில் விளையாடி 6000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் குறைவான போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் டிகாக்.

இதன் மூலம் இந்திய அணியின் லெஜன்ட் எம்எஸ் தோனியின் சாதனை முறியடிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன் இந்த சாதனையை 12 வருடங்கள் தன் வசம் வைத்திருந்த தோனி 166 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனையை 2011 ஆம் ஆண்டு தோனி படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சாதனையை டிகாக் முறியடித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டியில் 6000 ரன்களைக் கடந்ததன் மூலம் மிக விரைவாக 6 ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் குயின்டன் டி காக் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஹாசிம் அம்லா. மேலும் உலக அளவில் விரைவாக 6 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார் டிகாக்.

மேலும் நேற்றைய போட்டியில் 6000 ரன்களை கடந்ததன் மூலம் 6000 ரன்களுக்கு மேல் எடுத்த விக்கெட் கீப்பர்களின் சாதனை பட்டியலிலும் தன்னை இணைத்து இருக்கிறார் டிகாக். இதற்கு முன்பாக இலங்கை அணியின் குமார் சங்கக்காரா, ஆஸ்திரேலியா அணியின் ஆடம் கில்கிரிஸ்ட் இந்திய அணியின் மகேந்திர சிங் தோனி மற்றும் பங்களாதேஷ் அணியின் முஷ்ஃபிகர் ரஹீம் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றனர்.
இந்தப் பட்டியலில் 13,341 ரன்கள் உடன் சங்கக்காரா முதலிடத்தில் இருக்கிறார் அவரை தொடர்ந்து மகேந்திர சிங் டோனி 10773 ரன்கள் உடன் இரண்டாம் இடத்திலும் ஆஸ்திரேலியா அணியின் ஆட்ம் கில்கிரிஸ்ட் 9410 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் பங்களாதேஷ் அணியின் முஷ்பிகர் ரஹீம் 6847 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர் இந்தப் பட்டியலில் ஐந்தாவதாக இணைந்து சாதனை புரிந்திருக்கிறார் குயின்டன் டி காக். இவர் 2023 ஆம் வருட உலகக்கோப்பையோடு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருக்கிறார். இன்னும் அதற்கு இரண்டு மாதங்களே எஞ்சி இருக்கும் நிலையில் இந்த சாதனையை புரிந்திருக்கிறார் டி காக்.