வெறும் 13 ஓவர்.. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடந்த வினோதம்.. இங்கிலாந்து பரிதாபம்.. இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்

0
1087
England

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று துவங்கி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி, எதிர்பார்த்ததைப்போலவே சுழல் பந்துவீச்சு க்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு நடந்த இரண்டு நல்ல விஷயங்கள் அந்த அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

இங்கிலாந்துக்கு நடந்த இரண்டாவது நல்ல விஷயம், அந்த அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் ஏழாவது விக்கெட் விழும்போதும், அதிரடிக்கு மாறாமல் பொறுமையாக நின்று, அதற்குப் பிறகு சூழ்நிலையை கணித்து விளையாடி 88 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அணியைக் காப்பாற்றினார்.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் சேர்த்தது. பென் டக்கெட் 35 ஜானி பேர்ஸ்டோ 37 ரன்கள் என ஸ்டோக்ஸ்க்கு அடுத்த ரன் பங்களிப்பு கொடுத்தார்கள்.

இந்திய அணியின் தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா கலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். அக்சர் படேல் மற்றும் பும்ரா தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து பந்துவீச்சை சரமாரியாக நொறுக்கி தள்ளி ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்தார். ரோகித் சர்மா அதிரடியாய் விளையாட நினைத்து 24 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : தனியாளாக போராடிய ஸ்டோக்ஸ்.. மாஸ் காட்டிய இந்திய பவுலர்கள்.. பாஸ்பால் இங்கிலாந்து சுருண்டது

இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெறும் 13 ஓவர்களில் கொடுக்கப்பட்ட மூன்று ரிவ்யூகளையும் இழந்தது. ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன்கில் என மூன்று பேருக்கும் இங்கிலாந்து ரிவ்யூ சென்றது. ஆனால் அந்த மூன்றுமே தோல்வியில் முடிந்தது. இதனால் வெகு சீக்கிரத்தில் அனைத்து ரிவ்யூகளையும் இழந்து நிற்கிறது. மேலும் ரிவ்யூ டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இவ்வளவு வேகமாக இழந்த அணி இங்கிலாந்தாகத்தான் இருக்கும்.