கேட்ச்சால் வந்த வினை.. ஜோஸ் பட்லர் ஐபிஎல் விட்டே விலகும் அபாயம்! – வெளிவந்த ஷாக் மெடிக்கல் ரிப்போர்ட்!

0
197

ஜோஸ் பட்லருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது கேட்ச் பிடிக்கையில், விரலில் பலமாக காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அடுத்த ஒரு வாரம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என்று தெரிய வந்திருக்கிறது. மேலும் மொத்தமாக ஐபிஎல் விட்டே விலகும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் சனிகள் மோதிய லீக் போட்டியின் போது, ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் விரலில் படுகாயம் ஏற்பட்டது.

- Advertisement -

போட்டியின் போது பவுண்டரியில் நின்று கொண்டிருந்த பட்லர் ஷாருக் கானின் கேட்ச்சை எடுத்தார். அப்போதுதான் விரலில் இப்படி காயம் ஏற்பட்டது. இன்னிங்ஸ் நடுவிலேயே வெளியே சென்று விரலில் தையல் போட்டுக் கொண்டார். இதனால் தான் அந்த போட்டியில் ஓப்பனிங் செய்யவில்லை. மாறாக அஸ்வின் ஓப்பனிங் செய்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி வெளியான ரிப்போர்ட்டின் படி, ஜோஸ் பட்லர் விரலில் தையல் போடப்பட்டிருப்பதால் காயம் குணமடைய ஒரு வாரகாலம் ஆகலாம். அடுத்து இரண்டு லீக் போட்டிகளில் இருக்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இன்னும் சில நாட்கள் கூட ஆகலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதைவைத்துப் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்றாக, ஐபிஎல் தொடர் முடிவுற்றவுடன் ஆஷஸ் நடைபெறுகிறது. அதற்குள் ஜோஸ் பட்லருக்கு மீண்டும் இதுபோன்று நடந்து விடக்கூடாது என்பதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை நாட்டிற்கு திரும்பச் சொல்வதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதன்படி ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகலாம் என்று கூறுகின்றனர்.

- Advertisement -

இதுவும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் ஜானி பேர்ஸ்டோ முழுமையாக குணமடைந்துவிட்டாலும், உடல் நலன் கருதி அவரை ஐபிஎல் போட்டிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுப்பவில்லை. பென் ஸ்டோக்ஸ் உடல்நிலையிலும் முழு கவனம் செலுத்தி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் சிறிய காயம் ஏற்பட்டாலும் அவரை நாட்டிற்கு அழைத்துக் கொள்ளலாம். இப்போது அந்த கவனம் ஜோஸ் பட்லர் மீதும் திரும்பி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.