நானே இந்த நிலையில் இருக்கிறேன் என்னிடம் நீங்கள் அப்படி என்ன கேட்கப் போகிறீர்கள் – ஜோஸ் பட்லரிடம் பேசியதை போட்டுடைத்த விராட் கோலி

0
639

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற டெல்லி அணியை மீதமிருக்கும் ஒரு போட்டியில் தோல்வி பெற வேண்டும். டெல்லி அணியில் போட்டியின் முடிவை எதிர்பார்த்து பெங்களூர் அணி தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணியில் ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக விளையாடும் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த ஆண்டு சுமாராக விளையாடி இருக்கிறார். நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 20 க்கும் கீழ் இருந்தது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் 54 பந்துகளில் 73 ரன்கள் குவித்து மிக சிறப்பாக தன்னுடைய இரண்டாவது அரை சதத்தை இந்த சீசனில் குவித்தார். 14 போட்டிகளின் முடிவில் தற்பொழுது விராட் கோலி 303 ரன்கள் குவித்திருக்கிறார். நடப்பு சீசனில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 23.77 மட்டுமே.கடந்த ஆண்டுகளில் ஒப்பிட்டு பார்க்கையில் இது மிகவும் குறைவான ஆவெரேஜ் ஆகும்.

ஜோஸ் பட்லரிடம் நான் இதை தான் கூறினேன் – விராட் கோலி

- Advertisement -

கடந்த மாதம் 26ம் தேதி பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டி முடிந்தவுடன் ஜோஸ் பட்லர் என்னிடம் வந்து ஒரு விஷயத்தை உங்களிடம் கேட்க விரும்புகிறேன் என்று ஆரம்பித்தார்.

“நீங்கள் நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் அணிந்து இருக்கிறீர்கள். என்னால் ரன் குவிக்க முடியவில்லை. இதில் நீங்கள் என்னிடம் என்ன கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.பின்னர் நாங்கள் இருவரும் இதைப் பற்றி மேலும் பேசி புன்னகையுடன் உரையாடினோம் என்று விராட் கோலி தற்பொழுது கூறியுள்ளார்.

நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 13 போட்டிகளில் விளையாடி 627 ரன்களில் இதுவரை ஜோஸ் பட்லர் குவித்திருக்கிறார்.நடப்பு சீசனில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 52.25 என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -