நெதர்லாந்து அணிக்கு பாரபட்சம் பார்க்காமல் நோ-பால் பந்தையும் விரட்டிச் சென்று சிக்ஸர் அடித்த ஜோஸ் பட்லர் – வீடியோ இணைப்பு

0
934

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் எதிரே மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி கண்டது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்கிற கணக்கிலும் கைப்பற்றியது.

நேற்று நடந்து முடிந்த மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 10 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 30.1 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு நெதர்லாந்து அணி நிர்ணயித்த இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் நேற்று அதிகபட்சமாக ஜேசன் ராய் 101* ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பாரபட்சம் பார்க்காமல் அடித்த ஜோஸ் பட்லர்

நேற்று நடந்த 3வது போட்டியில் இயான் மோர்கன் காயம் காரணமாக விளையாடவில்லை அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் தலைமை தாங்கி விளையாடினார். 2 விக்கெட்டுகளும் விழுந்ததும் 4-வது வீரராக களமிறங்கிய ஜோஸ் 64 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 84* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

வான் மீகெரென் வீசிய இருபத்தி ஒன்பதாவது ஓவரில் 3 சிக்ஸர் அவர் விளாசினார். குறிப்பாக 5வது பந்து இரண்டுமுறை பவுன்ஸ் ஆகி லெக் சைடு பக்கமாக தள்ளி சென்றது. அந்த பந்தையும் விடாமல் பொறுமையாக துரத்திச் சென்று அதை பட்லர் ஓங்கி அடித்ததில் சிக்சருக்கு சென்றதும். பின்னர் ப்ரீ ஹிட் கொடுக்க அந்த பந்திலும் பட்லர் சிக்சர் அடித்தார்.
அவர் அவ்வாறு சிக்ஸர் அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டியில் மட்டும் பேட்டிங் விளையாடிய ஜோஸ் பட்லர் மொத்தமாக 248 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -