ரொம்ப வருத்தமா இருக்கு.. கேப்டன் பதவியை விட்டு விலகுகிறேன்.. ஜாஸ் பட்லர் சோகம்.. CT 2025 தோல்வி எதிரொலி

0
730

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகளிலும் மோசமாக தோல்வியடைந்து லீக் சுற்றிலேயே வெளியேறியது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலிருந்து தான் கேப்டன் பதவியை விட்டு விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

மோசமான தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட ஜாஸ் பட்லர், அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. அதற்குப் பிறகு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் மோசமாக விளையாடி ஏழாவது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணி, அதற்குப் பிறகு அதே ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் இந்திய அணிக்கு எதிராக அரை இறுதியில் தோல்வியடைந்தது.

அதுமட்டுமல்லாமல் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்து அடுத்த சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜாஸ் பட்லர் விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும் அணியின் நலன் கருதியே இந்த முடிவை எடுக்கப்பட்டதாகவும், சோகமாகவும் ஏமாற்றமாகவும் இருப்பதாக பட்லர் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கேப்டன் பதவியை விட்டு விலகுகிறேன்

இதுகுறித்து பட்லர் விரிவாக பேசும் போது “நான் இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போகிறேன். இது எனக்கும், அணிக்கும் சரியான முடிவாக இருக்கும் என்று தோன்றுகிறது. இங்கிலாந்து அணியில் வேறு யாராவது அணியை வழிநடத்த சிறப்பான இடத்திற்கு வருவார்கள் என்று நம்புகிறேன். இன்னும் மேலான உணர்ச்சிகள் இருக்கிறது அது சோகம் மற்றும் ஏமாற்றம் என அனைத்தும் கலந்து இருக்கிறது.

இதையும் படிங்க:ஓபனா சொல்றேன்.. இந்தியா பாக் இருதரப்பு தொடர் நடக்க.. இந்த விஷயம் மாறனும் – சுனில் கவாஸ்கர் பேட்டி

ஆனால் காலப்போக்கில் இது உறுதியாக கடந்து போகும் என்று நான் நம்புகிறேன். நான் மீண்டும் எனது கிரிக்கெட்டை ரசித்து சிறப்பாக விளையாட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் உங்கள் நாட்டை வழி நடத்துவது எவ்வளவு பெரிய மரியாதை மற்றும் அதனோடு வரும் சிறப்பு விஷயங்கள் என அனைத்தும் சிந்திக்க முடியும்” என்று ஜாஸ் பட்லர் பேசியிருக்கிறார். இதன் மூலமாக இங்கிலாந்து அணிக்கு புதிய கேப்டனாக விரைவில் வேறு ஒருவர் பதவி ஏற்பார் என்று தெரிகிறது.

- Advertisement -