ஓபனா சொல்றேன்.. இந்தியா பாக் இருதரப்பு தொடர் நடக்க.. இந்த விஷயம் மாறனும் – சுனில் கவாஸ்கர் பேட்டி

0
58

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி பரிதாபமாக இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தான் இருதரப்பு தொடர் குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கியமான கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

இருதரப்பு கிரிக்கெட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடர் விளையாடிய பிறகு சில பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக பாகிஸ்தான் சென்று இந்திய அணி விளையாடுவதை முற்றிலுமாக தவிர்த்தது. இருப்பினும் அவ்வப்போது பாகிஸ்தான் அணி மட்டும் ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றாலும் அந்த போட்டிகளை துபாய்க்கு மாற்றி விளையாடுகிறது.

சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் விளையாட மறுத்த இந்திய அணி அதற்கு பதிலாக துபாயில் விளையாடி வருவது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்களது விமர்சனங்களை தெரிவித்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடவும், இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறவும் சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது நிச்சயம் நடக்க வேண்டும்

இதுகுறித்து கவாஸ்கர் பேசும்போது “வெளிப்படையாக பேச வேண்டுமானால் இந்தியா, பாகிஸ்தான் எல்லைகளில் அமைதியை நிலைநாட்டுவதன் மூலமாக மட்டுமே பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி இருதரப்பு தொடரை விளையாட முடியும். இது மிகவும் எளிதான ஒன்றாகும். எல்லைகளில் அமைதி நிலவினால் இரு அரசாங்கங்களும் நிச்சயமாக எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று பேச ஆரம்பிக்கலாம். குறைந்தபட்சம் பேச ஆரம்பிக்கலாம் சில பின்னோக்கிய இணைப்புகள் இதன் மூலமாக நடைபெறும் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க:50 ஓவர் கிரிக்கெட் சலிப்பா இருக்கு.. அந்த ஒரு மேட்ச் தவிர மற்ற எந்த போட்டியையும் பார்க்க முடியல – அஸ்வின் கருத்து

மேலும் தரையிலும் தரைக்கு வெளியேயும் என்ன ஊடுருவல்கள் நடக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். அதனால்தான் இந்திய அரசாங்கம் இதெல்லாம் நிற்கும் வரை இதுகுறித்து எந்த முடிவையும் தற்போது எடுக்க இயலாது என்று கூறுகிறது” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். எனவே இந்தியா பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு இருநாட்டு எல்லைகளிலும் அமைதி நிலவ வேண்டும் என கவாஸ்கர் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -