நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் பிடித்த கேட்ச் குறித்து ஜாண்டி ரோட்ஸ் பாராட்டி பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா நேராக அடித்த பந்தை பவுண்டரி லைனில் துள்ளி குதித்துப் பிடித்து, வெளியில் இருந்த வீரரிடம் ஸ்ரேயாஸ் நொடிக்கும் குறைவான நேரத்தில் வீசினார். இது மிகச் சிறந்த கேட்ச் ஆக பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி அடைந்துள்ளது
இந்த கேட்ச் குறித்து ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் மிகவும் வியந்து தனது பாராட்டை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பீல்டிங்கின் தந்தை என்று அழைக்கப்படும் ஜாண்டி ரோட்ஸ் பாராட்டி பேசி இருக்கிறார்.
அவர் இது குறித்து பேசும்போது “அணிக்காக அந்த கேட்ச்சை பிடிக்க உதவுவதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் செய்த சாகசத்தை பார்க்கும் போது, நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பீல்டிங் எந்த அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது”
தாத்தா போல உணர்ந்தேன்
“நீண்ட காலமாக நான் பீல்டிங்கின் தந்தை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த நவீன விளையாட்டு வீரர்கள் பவுண்டரி லைனில் காட்டும் டைமிங் மற்றும் அவர்னஸ் இவற்றைப் பார்க்கும்போது பில்டிங்கின் தாத்தா என்று உணர்கிறேன்”
இதையும் படிங்க : இது பழைய பும்ரா கிடையாது.. உள்ளுக்குள்ள இந்த பிரச்சனை போயிட்டு இருக்கு.. உலக கோப்பையில் பார்த்த ஆளே வேற – வாசிம் ஜாபர் பேச்சு
“நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய பொழுது பெரும் பகுதி உள் வட்டத்திலேயே பீல்டிங் செய்து கொண்டு இருந்தேன். பிறகு நான் பீல்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, எல்லை கோட்டுக்கு அருகில் பயிற்சி அளிப்பது சிக்கல் நிறைந்த பகுதியாக இருந்தது. இது குறித்து பெரிய அளவில் கவனம் செலுத்தப்படவில்லை” என்று கூறி இருக்கிறார்.






