ஜோ ரூட் சதம் அடித்தும்.. பென் ஸ்டோக்ஸ்க்கு வந்த புது பிரச்சனை.. காத்திருக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள்

0
1660
Root

இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இரும்பு கடை பாரம்பரியமான முறையில் விளையாடுவது போல விளையாடி, பெரிய நெருக்கடியில் இருந்து தப்பித்து மீண்டிருக்கிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் ஆட்டத்தின் முதல் பகுதியில் 112 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகள் இழந்து மிகவும் பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் 31ஓவர்களுக்கு 86 ரன்கள் மட்டுமே எடுத்து வைக்க தராமல் ஜோரூட் மற்றும் பென்ஸ் ஃபோக்ஸ் இருவரும் இங்கிலாந்து அணியை ஓரளவு கரை சேர்த்தார்கள்.

இதற்குப் பிறகு நிலைத்து நின்று விளையாடிய ஜோ ரூட் தனது சர்வதேச 31 ஆவது டெஸ்ட் சதத்தை அடித்தார். இந்த தொடரில் இந்த போட்டிக்கு முன்பாக அவர் மொத்தமாக ஆறு இன்னிங்ஸ்களில் 157 பந்துகளை மட்டுமே சந்தித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்றைய ஆட்ட நாள் முடிவின் பொழுது ஆட்டம் இழக்காமல் 226 பந்துகள் சந்தித்து 106 ரன்கள் எடுத்திருக்கிறார். இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் என வலிமையான நிலையில் இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடர் முழுவதும் இந்தப் போட்டிக்கு முன்பாக ஜோ ரூட் பாஸ்பால் முறையில் விளையாடி மிகப்பெரிய சரிவை சந்தித்து வந்தார். இதன் காரணமாக அவரது பேட்டிங் அணுகுமுறை மீதும், இங்கிலாந்து கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அவரை தொடர்ந்து இப்படி விளையாட வைப்பது குறித்தும் பெரிய விமர்சனங்களை இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் வைத்தார்கள்.

ஜோ ரூட் பல சூப்பர் கார்களுக்கு மத்தியில் ஒரு கிளாசிக் கார் எனவும், அவர் எப்பொழுதும் தன்னுடைய ஆட்டத்தை ஒரே பாணியில் தொடர்ந்து, பாரம்பரிய டெஸ்ட் பேட்டிங் அணுகு முறையில் விளையாட வேண்டும் என மைக்கேல் வாகன் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜோ ரூட் அதேபோல் பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறையில் விளையாடி சதமும் அடித்து விட்டார். இந்த முறையில் விளையாடி ஜோ ரூட் சதம் அடித்திருக்கின்ற காரணத்தினால், பாஸ்பால் அணுகுமுறை மீதான விமர்சனம் இன்னுமே அதிகரித்து இருக்கிறது.

இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கலம் இருவர் மீதும் பாஸ்பால் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். இன்று இங்கிலாந்து நன்றாக விளையாடிய இவர்களுக்கு புதுவித பிரச்சனை உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!