மைக்கேல் கிளார்க் மற்றும் சச்சினைப் பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் புதிய சாதனை

0
704
Joe Root Sachin and Michael Clarke

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது யூசப் முதலிடத்தில் இருக்கிறார். 2006 ஆம் ஆண்டு 1788 ரன்களை அவர் அந்த ஆண்டு குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த விவியன் ரிச்சர்ட்ஸ் ( 1710 ரன்கள் – 1976ஆம் ஆண்டு ) இரண்டாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரீம் ஸ்மித் ( 1656 ரன்கள் – 2008ஆம் ஆண்டு ) 3வது இடத்திலும் இருக்கின்றனர்.

தற்போது அந்தப் வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் 4வது இடத்தில் தன்னுடைய பெயரை நிலை நாட்டி இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் 1606 ரன்கள் குவித்திருக்கிறார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மைக்கேல் கிளார்க் (1595 ரன்கள் – 2012ஆம் ஆண்டு ) நான்காவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அவர் ஐந்தாவது இடத்திற்கு நகர்ந்துள்ளர். ஆறாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் ( 1562 ரன்கள் – 2010ஆம் ஆண்டு ) ஏழாவாது இடத்தில் கவாஸ்கர் ( 1555 ரன்கள் – 1979ஆம் ஆண்டு ) எட்டாவது இடத்தில் ரிக்கி பாண்டிங் ( 1544 ரன்கள் – 2005ஆம் ஆண்டு ) இருப்பது குறிபபிடத்தக்கது.

- Advertisement -

இந்த வருடம் அவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் 64 ஆகும். அதே போல இந்த வருடம் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்கள் குவித்திருக்கிறார்.

முகமது யூசஃப்பை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடிப்பாரா ஜோ ரூட்

தற்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தற்பொழுது முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்து வருகிறது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து உள்ளார்.

இந்தப் போட்டியில் மற்றொரு இன்னிங்ஸ் கையில் இருக்க, 3வது டெஸ்ட் போட்டி டிசம்பர் மாதம் 26ஆம் தேதி துவங்குகிறது. அந்தப் போட்டி அன்று தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அந்த போட்டியில் இருக்கும் இரண்டு இன்னிங்சை சேர்த்து மொத்தமாக அவருக்கு மூன்று இன்னிங்ஸ் இந்த ஆண்டு மீதமிருக்கிறது.

- Advertisement -

அந்த மூன்று இன்னிங்சில் அவர் 183 ரன்கள் குவிக்கும் பட்சத்தில், முதலிடத்தில் இருக்கும் முகமது யூசஃப்பை பின்னுக்குத்தள்ளி ஜோ ரூட் 1789 ரன்களுடன் முதல் இடத்தை பிடிப்பார். சற்று கடினமான வேலை என்றாலும் அதை அவர் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையில் இங்கிலாந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நம்பிக்கை வார்த்தைகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.