இந்திய கிரிக்கெட்

சிராஜ் இப்படிப்பட்ட ஆள்தான்.. எங்க டீம்ல கூட இப்படி ஒருத்தர் வேணும்.. அதெல்லாம் பொய் கோபம் – ஜோ ரூட் பாராட்டு

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்டர் ஜோ ரூட் போர் வீரன் என்றும் அவரிடம் இருப்பது பொய்யான கோபம் தான் எனவும் பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் எதிரணியிடம் மோதும் போக்கால் விமர்சனத்தை சந்தித்தாலும் கூட, தொடர்ந்து ஐந்து போட்டிகளிலும் அவர் வெளிப்படுத்தி வரும் உழைப்பின் காரணமாக எதிரணி மற்றும் எதிரணி ரசிகர்களும் விரும்பக்கூடிய வீரராக மாறி இருக்கிறார்.

உண்மையான போர் வீரன்

முகமது சிராஜ் குறித்து ஜோ ரூட் பேசும்பொழுது “அவரின் குணத்தால் அவர் ஒரு உண்மையான போர் வீரன். உங்கள் அணிகளும் இப்படிப்பட்ட ஒரு வீரர் இருக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய வீரர் அவர். அவர் எப்படிப்பட்ட குணம் கொண்டவர் என்றால் இந்திய அணிக்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் கொடுக்கிறார். இதற்கான பெருமை அவருக்கே சேரும்!”

“அவர் கிரிக்கெட்டை அணுகும் விதத்தை நீங்கள் பார்த்தால், அவரிடம் சில சமயங்களில் பொய்யான கோபம் இருக்கும். இதை நான் இங்கு நேரடியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அவரை ஒரு நல்ல பையன் என்று சொல்வதற்கு தகுதியானவர்”

- Advertisement -

அவர் வெற்றிக்கு காரணம் இதுதான்

“அவர் நம்ப முடியாத அளவுக்கு கடினமாக முயற்சி செய்கிறார். அவர் மிகவும் திறமையான வீரர். அவருக்கு விக்கெட்டுகள் கிடைத்ததற்கு காரணம் இருக்கிறது. அதற்கு முதல் காரணம் அவருடைய பணி நெறிமுறை மற்றும் இரண்டாவது காரணம் அவருடைய திறமை”

இதையும் படிங்க : கம்பீர் கில்லுக்கு விழிப்புணர்வே இல்ல.. இந்த காலத்துல இந்த தப்ப ஏத்துக்க முடியாது – அஸ்வின் வருத்தம்

“அவருக்கு எதிராக விளையாடுவதை நான் எப்பொழுதும் ரசிக்கிறேன். அவரது முகத்தில் எப்பொழுதும் ஒரு பெரிய புன்னகை இருக்கும். மேலும் தனது அணிக்காக எல்லாவற்றையும் தருகிறார். ரசிகராக வேறு எதையும் இதைவிட விரும்பிட முடியாது. மேலும் எந்த ஒரு வீரருக்கும் இதை விட சிறந்த முன்மாதிரியும் இருக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by