சச்சினின் உலக சாதனையை முறியடிப்பிங்களா?.. ஜோ ரூட் நேர்மையான பதில்.. இந்திய ரசிகர்கள் நெகிழ்ச்சி

0
9330
Root

உலக கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் டெஸ்ட் வடிவத்தில் ஜோ ரூட் மிகவும் சிறப்பாக இருக்கிறார். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக இருக்கிறார். சச்சின் டெஸ்ட் சாதனைகளை ஜோ ரூட் முறியடிக்க முடியுமா? என அவரிடம் கேட்ட பொழுது மிகவும் நேர்மையான பதிலை கூறியிருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 போட்டிகள், 51 சதங்கள் மற்றும் 15,921 ரன்கள் அடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருக்கும் ரிக்கி பாண்டிங் எடுத்த ரன்கள் 13, 378. ஏறக்குறைய இரண்டாவது இடத்தில் இருப்பவரை விட 2500 ரன்களுக்கு மேல் சச்சின் டெண்டுல்கர் அடித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது ஜோ ரூட் 142 போட்டிகளில் விளையாடி 32 சதங்கள் மற்றும் 11 ஆயிரத்து 940 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்னும் அவர் சச்சின் சாதனையை முறியடிக்க 20 சதங்கள் மற்றும் 4000 ரன்கள் எடுக்க வேண்டும். அதிக சத சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், அதிக ரன்கள் சாதனையை அவர் முறியடிக்க முடியும் என சில முன்னாள் வீரர்கள் நம்புகிறார்கள்.

இது குறித்து ஜோ ரூட் இடம் கேட்ட பொழுது “நான் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நாக்பூர் மைதானத்தில் களமிறங்கிய பொழுது, என்னை இப்படிப்பட்ட சாதனைகளோடு எல்லாம் ஒப்பிட்டு பார்த்ததே கிடையாது. நான் விளையாட்டை விளையாடியதில் மட்டுமே மகிழ்ச்சி அடைந்தேன். மகத்தான வீரர்களின் அருகில் வைத்து பேசும் பொழுது, என்னை நானே கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது

- Advertisement -

சச்சின் சாதனைகளை முறியடிக்க முடியுமா? என்று யாருக்கு தெரியும். இதைப் பற்றி எல்லாம் நான் பேசிவிட்டு ரன்கள் அடிக்க முடியாத கடினமான காலகட்டத்திற்கு செல்லப் போகிறேன் என்று நினைக்கிறேன்.உண்மையை சொல்லப்போனால் அடுத்த இரண்டு ஆட்டங்களில் என்ன நடக்கிறது என்று கூட நமக்கு தெரியாது. நாம் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அங்கிருந்து எங்கு செல்கிறோம் என்று பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 282 ரன்.. 8 ஓவர்களில் இங்கிலாந்துக்கு சிறப்பான செக் வைத்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோல்டர் பிராத்வெய்ட் அபாரம்

தற்போது இங்கிலாந்துக்கு அதிக டெஸ்ட் ரன்கள் குவித்தவராக அலைஸ்டர் குக் சாதனையை ஜோ ரூட் முறியடித்திருக்கிறார். மேலும் ஒட்டுமொத்தமாக 345 சர்வதேச போட்டிகளில் 19,355 ரன்கள் எடுத்து ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்கின்ற சாதனையும் இவரிடமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -