ரூட்டை மாற்றிய ஜோ ரூட்.. ஒல்லி போப் சொன்னது என்னாச்சு? இங்கிலாந்து பாஸ்பால் அவ்வளவுதானா? ரசிகர்கள் கேள்வி

0
134
Root

இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் தங்கள் அணி பேட்டிங் செய்யும் என அறிவிக்க, இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையாக விளையாடியது.

- Advertisement -

இதற்குப் பிறகு ஜாக் கிரவுலி அதிரடியாக விளையாடினார். இவருக்கு அடுத்து ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினார். இங்கிலாந்துக்கு வழக்கம் போல் வேகமாக ரன்கள் வர ஆரம்பித்தது.

அதே சமயத்தில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை முதல் செஷனில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கொத்தாக கைப்பற்றினார்கள். இங்கிலாந்து ராணி 24 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட் இழந்து 112 ரன்கள் எடுத்தது. நான்கரை ரன்னுக்கு மேல் ஒரு ஓவருக்கு எடுத்து இருந்தது. அதே சமயத்தில் 5 விக்கெட்டுகளை இழந்ததால் இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு தொடர்ந்து பென் ஃபோக்ஸ் மற்றும் ஜோ ரூட் இருவரும் இரண்டாவது செஷன் முழுமையும் விற்க தராமல் பொறுமையாக டெஸ்ட் கிரிக்கெட்டை பாரம்பரிய முறையில் விளையாடினார்கள்.

- Advertisement -

இவர்கள் இரண்டாவது செஷன் முழுவதும் விளையாடி மொத்தம் 86 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். ஓவருக்கு மூன்று ரன்கள் கூட எடுக்கவில்லை. பாஸ்பால் முறையில் இருந்து விளையாடுவதில் ஜோ ரூட் எஸ்கேப் ஆகி வெளியில் வந்துவிட்டார். இதன் காரணமாக அவர் இந்தத் தொடரில் முதல்முறையாக அரை சதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் போப் தாங்கள் எந்த காரணத்திற்காகவும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள மாட்டோம் என்று கூறியிருந்தார். ஆனால் தற்பொழுது இங்கிலாந்து அணி பாஸ்பால் அணுகுமுறையில் இருந்து வெளியில் வந்து விளையாடுகிறது. மேலும் ஜோ ரூட் பாஸ்பால் முறையில் ஒரு ஷாட் கூட விளையாட செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.