சச்சின், விராட் கோலி இருவரின் ரெக்கார்ட் காலி… புதிய ரெக்கார்ட் படைத்த ஜோ ரூட்! பல வருடங்கள் கெத்தாக முதலிடத்தில் நிற்கும் ஜாம்பவான்!

0
1015

11, 168 ரன்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து புதிய வரலாறு படைத்திருக்கிறார் ஜோ ரூட். சச்சின், விராட் கோலி, கிரீம் ஸ்மித் ஆகியோரின் ரெக்கார்ட் உடைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

அதிரடியாக முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இவர் 118 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் முதல் நாள் முடிவதற்குள்ளேயே இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணிக்கு கவாஜா சதம் அடித்து அசத்தினார். அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்துக்கொடுக்க, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து தடுமாற்றம் கண்டது. 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 7 ரன்கள் முன்னிலையுடன் மொத்தம் 280 ரன்கள் முன்னிலை பெற்றது ஆஸ்திரேலிய அணி.

- Advertisement -

சச்சின், விராட் கோலி ரெக்கார்டை முறியடித்த ஜொ ரூட்!

இரண்டாவது இன்னிங்கில் ஜோ ரூட் 46 ரன்கள் அடித்து நேத்தன் லைன் பந்தில் ஸ்டம்பிங் அவுட் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் முதல்முறையாக ஸ்டம்பிங் மூலம் அவுட் ஆகிறார். இதன் மூலம் சச்சின், விராட் கோலி ஆகியோரின் ரெக்கார்டுகளை முறியடித்து, அதிக ரன்கள் அடித்தபின் ஸ்டம்பிங் அவுட் ஆன வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஷிவ்நரைன் சந்தர்பால் இருக்கிறார். பட்டியலை கீழே காணலாம்.

  1. 11414 ரன்கள் – சந்தர்பால்
  2. 11168 ரன்கள் -ஜோ ரூட்
  3. 8800 ரன்கள் – கிரீம் ஸ்மித்
  4. 8195 ரன்கள் – விராட் கோலி
  5. 7419 ரன்கள் – சச்சின் டெண்டுல்கர்