92 ஆண்டு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு.. ஜோ ரூட் எந்த பேட்ஸ்மேனும் செய்யாத சாதனை

0
729
Root

தற்பொழுது இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் ஐந்து விக்கெட்டுகளை முதல் செசனிலேயே இழந்துவிட்டது. எனவே இங்கிலாந்து அணி 200 ரன்களை தொடுமா? என்கின்ற கேள்விக்குறி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஜோ ரூட் மற்றும் பென் ஃபோக்ஸ் இருவரும் சேர்ந்து இரண்டாவது செசன் முழுவதும் விக்கெட் தராமல் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியை நெருக்கடியில் இருந்து வெளியே கொண்டு வந்தார்கள்.

மூன்றாவது செஷனில் அதிரடியில் ஈடுபட நினைத்த பென் போக்ஸ் 47 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். ஆனாலும் ஜோ ரூட் தன்னுடைய நிதானத்தை தவறவிடவே இல்லை.

தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடிய அவர் மிகப் பொறுமையாக 219 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அவருக்கு இந்த சதம் வந்திருக்கிறது. அவருக்கு இது 31ஆவது சர்வதேச டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக அதிக சதம் அடித்த பேட்ஸ்மேனாக ஜோ ரூட் சாதனை படைத்திருக்கிறார். அவர் இதுவரையில் 10 சர்வதேச டெஸ்ட் சதங்களை இந்தியாவிற்கு எதிராக அடித்திருக்கிறார்.

இந்தியாவிற்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் :

ஜோ ரூட் – 10
ஸ்டீவ் ஸ்மித் – 9
ரிக்கி பாண்டிங் – 8
விஐவி ரிச்சர்ட்ஸ் – 8
கேரி சோபர்ஸ் – 8

மேலும் ஒரு அணிக்கு அது எதிராக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் டான் பிராட்மேன் இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் 19 சதங்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக 13 சதங்கள் அடித்து சுனில் கவாஸ்கர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.