ஜெயவர்தனாவின் ரெக்கார்டை முறியடித்த ஜோ ரூட்.. சச்சினின் கிரேட் சாதனையை பிரேக் செய்யவும் வாய்ப்பு

0
722

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் வேளையில், இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் டாப் 10 லிஸ்டில் இணைந்திருக்கிறார்.

தற்போது இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மஹிலா ஜெயவர்தனாவின் சாதனையை ஜோ ரூட் முறியடித்திருக்கும் நிலையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் ஆபத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போதைய நவீன கால கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ்ஸ்மித் இவர்களின் வரிசையில் இருப்பவர் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜோ ரூட். 2012ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்த சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

லண்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 416 ரன்கள் குவித்து இருக்கிறது. அதிகபட்சமாக ஒல்லி போப் 121 ரன்கள், கேப்டன் ஸ்டோக்ஸ் 69 ரன்களும் குவித்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்த போட்டியில் விளையாடிய ஜோ ரூட் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும், 11 ஆயிரத்து 821 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 10 வீரர்களின் பட்டியலில் நுழைந்து இருக்கிறார். 14 ரன்கள் குவித்ததன் மூலம் மஹிலா ஜெயவர்த்தனாவின் 11,814 ரன்கள் சாதனையை முறியடித்து தற்போது ஒன்பதாவது இடத்திற்கு ஜோ ரூட் முன்னேறி இருக்கிறார். இதுவரை 141 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 49.8 பேட்டிங் ஆவரேஜில் இந்த ரன்களை குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் எட்டாவது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரரான சந்தர் பால் 11,867 ரன்களைக் குவித்திருக்கிறார். ஜோ ரூட் மற்றும் சந்தர்பாலுக்கு இடையே 46 ரன்கள் மட்டுமே வித்தியாசம் இருக்கும் நிலையில், அதை விரைவில் முறியடித்து எட்டாவது இடத்திற்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:181ரன்கள்.. தோனி டிராவிட் மெகா ரெக்கார்டு.. இலங்கை தொடரில் ரோகித் சர்மா உடைக்க பெரிய வாய்ப்பு

மற்ற ஏழு இடங்களில் முறையே சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், காலிஸ், ராகுல் டிராவிட், குக், குமார் சங்ககாரா, பிரைன் லாரா ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது சக நாட்டு வீரரான குக் 12,472 ரன்கள் குவித்திருக்கிறார். முதல் இடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்கள் குவித்திருக்கிறார். ஜோ ரூட் இன்னும் சில ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -