53 பந்துகளில் சதம்.. 8 இமாலய சிக்சர்கள் ! டுபிளஸிஸ் அதிரடியால் சூப்பர் கிங்ஸ் வெற்றி

0
2982

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் புதிய டி20 தொடரில் முதல் சத்தத்தை ஜோகனஸ்பர்க்  சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டுப்ளசிஸ் விளாசி உள்ளார். டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கேப்டன் குயின்டன் டி காக் 6 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், கையில் மேயர்ஸ் மற்றும் பிரிட்ஸ்சிக் தலா 28 ரன்கள் அடித்து அடுத்தடுத்து வெளியேறினர். 

இதே போன்று மூல்டர்  டக் அவுட் ஆக சூப்பர் ஜெய்ன்ஸ் அணி தடுமாறியது. எனினும் தனி ஆளாக போராடிய ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி 48 பந்தில் 65 ரன்கள் அடித்தார். அவருக்கு துணையாக ஜேசன் ஹோல்டர் 28 ரன்கள் சேர்க்க டர்பன் சூப்பர் ஜெயந்தி 178 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனை எடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் விளையாடியது .

இதில் ஹென்றிக்ஸ் மற்றும்  டுபிளஸ் தொடக்க வீரராக களமிறங்கினர். ஹென்றிக்ஸ் பொறுமையாக விளையாடி ரசிகர்களை வெறுப்பேற்றினார். இதனால் மறு புறத்தில் இருந்த கேப்டன் டுப்ளசிஸ் அதிரடியாக விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். இதனால் எதிரணியின் பந்துகிச்சை துவம்சம் செய்த டுபிளஸ் சிக்சர் பவுண்டர்களாக விரட்டினார். இதில் டுப்ளசிஸ் 53 பந்தில் சதம் விளாசினார்.மறுப்புரம் ஹென்றிக்ஸ் 46 பந்தில் 45 ரன்கள் சேர்த்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்தது. மேலும் கடைசி வரை அதிரடியாக விளையாடிய டுபிளசிஸ் 58 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார். இதில் 8 சிக்சர்களும், எட்டு பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 19 புள்ளி 1 வது ஓவரில்  சூப்பர் கிங்ஸ் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் விளையாடிய ஏழு போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்  அணி புள்ளி பட்டியலில்  நான்காவது இடத்தில் உள்ளது.