1 ரன் தாண்டாத 8 பேர்.. 5 பேர் டக் அவுட்.. சூப்பர் கிங்ஸ் அபார பவுலிங்.. 9 விக்கெட்டில் சன் ரைசர்சை வீழ்த்தியது.. எஸ்ஏ டி20

0
5154

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 22 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் சிறப்பாக விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக்

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் க்ராவ்லி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பெடிங்காம் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட அதற்குப் பின்னால் வந்த அபெல், ஹெர்மன் மற்றும் கேப்டன் மார்க்ரம் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள். அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஸ்டெப்ஸ் 38 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அதற்குப் பின்னர் களம் இறங்கிய மார்க்கோ ஜான்சன் 18 பந்துகளில் மூன்று பவுண்டரி யோடு 22 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய நான்கு வீரர்களில் ஒரு வீரர் டக் அவுட் மற்றும் மூன்று வீரர்கள் ஒரு ரன் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 5 பேர் டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சன்ரைசர்ஸ் அணி 19 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை சிபாம்லா 3 விக்கெட் மற்றும் விலிஜோன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

சிறப்பான வெற்றி பெற்ற சூப்பர் கிங்ஸ்

அதற்குப் பின்னர் சூப்பர் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி களம் இறங்கியது. சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக கான்வே மற்றும் அணியின் கேப்டன் டூ பிளஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். டூ பிளசிஸ் எதிர்பாராத விதமாக 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பார்த்த விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய லுப்பே கான்வேவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதில் கான்வே கடந்த சில போட்டிகளாக சரியாக விளையாடாத நிலையில் இந்தப் போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டார்.

இதையும் படிங்க:அஸ்வினுக்கு இத சொன்னது என் தப்புதான்.. மன்னிச்சிடுங்க.. முன்னாள் இந்திய வீரரிடம் மன்னிப்பு கேட்ட பத்ரிநாத்.. நடந்தது என்ன.?

56 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 11 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்சர் என 76 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். மற்றொரு முனையில் லுப்பே 17 பந்துகளில் 25 ரன்கள் குவித்த நிலையில் சூப்பர் கிங்ஸ் அணி 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -