இந்தியா டெஸ்ட் அணியில் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த சூழ்நிலையில் தற்போது அவருக்கு நாட்டின் உயரிய விருதான மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அஸ்வினை பாராட்டிய சுப்ரமணியம் பத்ரிநாத் தனது தவறுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டபிள்யூ வி இராமனிடம் மன்னிப்பு கேட்ட செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளராக கருதப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்தபோது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத விதமாக தனது ஓய்வு அறிவித்தார். அஸ்வின் இதுவரை 100க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500க்கும் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியான 139 நபர்களின் பட்டியலில் கிரிக்கெட் பிரதிநிதிப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றிருக்கிறார். இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்திய முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மன்னிப்பு கேட்ட சுப்பிரமணியம் பத்ரிநாத்
அதில் அவர் கூறியிருப்பதாவது “பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் தமிழக கிரிக்கெட் வீரர். எந்த ஒரு இளைஞரும் இதை விட ஒரு சிறந்த முன்மாதிரியை பார்க்க முடியாது. உண்மையிலேயே இந்த தருணத்தை நான் பெருமையாக உணர்கிறேன். என்று சமூக வலைதளத்தில் பதிவினை வெளியிட்டு இருந்தார். இதனை கவனித்த இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் டபுள்யூ வி ராமன் “2003ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் வெங்கட்ரராகவன்” என்று பத்ரிநாத் பதிவிற்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:கோலி ரோஹித்னால.. பாவம் மத்த பிளேயர்ஸ் இதுல மாட்டுறாங்க.. இதுக்கு அவங்களுக்கு நேரமே இல்ல – பாக் ரசீத் லத்தீப்
இதனை அறிந்த பத்ரிநாத் உடனே “இது அறியாமையால் நிகழ்ந்தது எனவே பயிற்சியாளருக்கு மன்னிப்பு மற்றும் தெளிவு படுத்தலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். உடனே அதற்கு பதில் தெரிவித்திருந்த ராமன் “இல்லை இல்லை, இது அறியாமையால் வந்ததல்ல 2003ஆம் ஆண்டு வெங்கட்ராமனுக்கு விருது கொடுக்கப்பட்ட போது நீங்கள் சிறுவனாக இருந்திருப்பீர்கள். எனவே இதை அறிய வாய்ப்பு குறைவு தான்” என்று கூறி இருந்தார். எனவே அவர்களது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.