இந்திய டி20 அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பர் ஜிலேஷ் சர்மா தான் ஆதிக்கம் செலுத்தி விளையாடுவதற்கு முக்கிய காரணம் ஒரு குறிப்பிட்ட தமிழக வீரர்தான் என நன்றி தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதல் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இரண்டாவது விக்கெட் கீப்பரான ஜதீஸ் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
ஜிதேஷ் சர்மாவால் வந்த தெளிவு
தற்போது துணை கேப்டன் கில் துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்படுவதால், அந்த இடத்தில் விளையாடி வந்த சஞ்சு சாம்சன் மிடில் வரிசையில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ஆனால் 30 வயது தாண்டி ஒரு புதிய இடத்தில் செட் ஆகி விளையாடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.
இந்த நிலையில் பேட்டிங்கில் கீழ் வரிசையில் விளையாடுவதற்காகவே தொடர்ந்து தயாராகி வரக்கூடியவராக ஜிதேஷ் சர்மா இருக்கிறார். எனவே அவர் கீழ் வரிசையில் விளையாடும் பொழுது அதற்கான ஷாட் எல்லாம் வைத்திருக்கிறார். நிறைய மாடர்ன் கிரிக்கெட் ஷாட் விளையாடுவதால் அவரால் இறுதி நேரத்தில் அதிக ரன்களை எடுக்க முடிகிறது.
இவர்தான் காரணம்
இது குறித்து ஜிதேஷ் சர்மா பேசும் பொழுது “நான் மூன்றாவது t20 போட்டியில் விளையாடுகிறேன் என்று கேள்விப்பட்டதும் நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன். ஏனென்றால் எனக்கு நீண்ட நாட்கள் கழித்து விளையாடுவதற்கு ஒரு போட்டி கிடைத்தது. அந்த நேரத்தில் நான் என்னை மிகவும் அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்தேன். மேலும் விஷயங்களை என் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் முயற்சி செய்தேன்”
இதையும் படிங்க : ஆசஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு.. கம்மின்ஸ் இல்லை.. 3 புதுமுக வீரர்கள் – முழு அட்டவணை
“என்னுடைய பேட்டிங் திறமை மேம்படுவதற்கு என்னுடன் உழைத்த தினேஷ் கார்த்திக் அவர்களுக்கு என் நன்றி. அதனால்தான் என்னால் சில ஷாட்டுகளை மிகவும் சவுரியமாக அடிக்க முடிகிறது. நான் அந்த போட்டியில் களம் இறங்கிய பொழுது, புதிய பேட்ஸ்மேனாக வருகிறேன் எனவே நேரம் எடுத்துக் கொள்வேன் என அவர்கள் நினைக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். நான் ஆதிக்கம் செலுத்தி விளையாட கூடியதை அவர்களுக்கு காட்ட நினைத்தேன். இது ரன் துரத்தலை எளிதாக மாற்றியது” என்று கூறியிருக்கிறார்.






