ஆசஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு.. கம்மின்ஸ் இல்லை.. 3 புதுமுக வீரர்கள் – முழு அட்டவணை

0
57
Australia

உலகப் புகழ்பெற்ற சரித்திர அடிப்படை கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆசஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முறை 5 போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 2ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்குகிறது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 4, 17, 26 மற்றும் ஜனவரி 4ம் தேதி என ஐந்து டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிவுக்கு வருகிறது.

- Advertisement -

கேப்டன் கம்மின்ஸ் இல்லை

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் கம்மின்ஸ் இடம் பெறவில்லை. அவர் காயத்தில் இருக்கின்ற காரணத்தினால் ஸ்மித் முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

மேலும் அனுபவ வீரர் மிட்சல் மார்ஸ் தேர்வு செய்யப்படவில்லை. அவருடைய இடத்திற்கு தொடர்ந்து பியூ வெப்ஸ்டர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் புதுமுக வீரர்களாக சீன் அப்போட், பிரன்டன் டக்கெட், ஜாக் வெதரால்டு என மூன்று அறிமுக வீரர்கள் இடம் பெறுகிறார்கள்.

- Advertisement -

தொடரும் பழைய கூட்டணி

இந்த டெஸ்ட் போட்டிக்கு வேகப்பந்து வீச்சு யூனிட்டில் மிட்சல் ஸ்டார்க், ஜாஸ் ஹேசில்வுட் மற்றும் போலன்ட் என மூவர் கூட்டணி இடம் பெறுகிறது. ஒரே ஒரு சுழல் பந்து வீச்சாளராக நாதன் லயன் இடம் பெறுகிறார். விக்கெட் கீப்பர்களாக அலெக்ஸ் கேரி மற்றும் ஜோஸ் இங்லீஷ் இடம் பெறுகிறார்கள்.

இதையும் படிங்க: எங்களுக்கு வெற்றி தேவையில்லை.. இதுதான் தேவை.. வீரர்கள் ஏமாற்றம் அடைந்தால் பரவாயில்ல – மோர்னே மோர்கல் பேச்சு

ஆஸ்திரேலிய அணி : ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட் மற்றும் பியூ வெப்ஸ்டர்.

- Advertisement -