18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக துபாயில் நடைபெற்று முடிந்தது. இதில் ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் சிறந்த வீரர்களை ஏலத்தில் வாங்கியது.
இந்த சூழ்நிலையில் தற்போது பஞ்சாப் அணியில் இருந்து பெங்களூர் அணிக்காக விளையாட போகும் ஜித்தேஷ் சர்மா பெங்களூர் அணி குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பெங்களூர் அணியில் ஜித்தேஷ் ஷர்மா
மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழாவின் மெகா ஏலம் சில வாரங்களுக்கு முன்பாக துபாயில் நடைபெற்ற நிலையில் பஞ்சாப் அணிக்காக இதுவரை விளையாடிய ஜித்தேஷ் சர்மாவை 11 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியிருக்கிறது. கடைசியாக பஞ்சாப் அணிக்கு விளையாடிய போது இவரது ஆட்டம் போதிய அளவு சிறப்பாக இல்லாத நிலையிலும் பெங்களூர் அணி இவர் மீது நம்பிக்கை வைத்து அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணிக்காக கடந்த சீசனில் பினிஷர் ரோலில் விளையாடிய தினேஷ் கார்த்திக் தற்போது அதே பெங்களூர் அணியின் ஆலோசகராக திகழ்ந்து வருகிறார். தற்போது பெங்களூர் அணியில் ஏராளமான சிறந்த வீரர்கள் உள்ளதால் இந்த முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் பெங்களூர் அணி செயல்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் ஜித்தேஷ் ஷர்மா தினேஷ் கார்த்திக் உடன் பல விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பதாக சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
விராட் கோலி பெயரை உச்சரிக்க விரும்புகிறார்கள்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “தினேஷ் கார்த்திக் பாயுடன் நான் பணிபுரிய ஆவலோடு காத்திருக்கிறேன். அவர் ஆர்சிபி அணிக்காக ஃபினிஷர் ரோலில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். தற்போது அதே ரோலில் நான் விளையாட காத்திருக்கிறேன். நான் விராட் கோலியின் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள், ஆனால் நான் தினேஷ் கார்த்திக் பாயின் பெயரை உச்சரிக்கிறேன். ஏனென்றால் அவர் எனக்கு மேலும் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு நபராக இருக்கிறார்.
இதையும் படிங்க:பிசிசிஐயை மதிக்காமல்.. துபாயில் உலா வரும் சஞ்சு சாம்சன்.. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதில் சிக்கல்.. முழு விபரம்
நான் இவ்வளவு பெரிய தொகையை எதிர்பார்க்கவில்லை.6 முதல் 8 கோடி ரூபாய் கிடைக்கும் என்ற எதிர்பார்த்தேன். ஆனால் பெங்களூர் அணி என் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்து என்னை வாங்கியது. இது நான் அழுத்தமாக உணரவில்லை. ஒருவித சவாலாகவே எனக்கு தோன்றுகிறது. இதற்கு நான் தகுதியுள்ளவன் என்று நினைக்கிறேன். ஆர்சிபி எனக்கு கொடுத்த விலையை எனது செயல்பாட்டின் மூலமாக திருப்பிக் கொடுக்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.