இனி ஐபிஎல் இலவசமாக பார்க்க முடியாது.. இணைந்த ஜியோ ஹாட்ஸ்டார்.. வெளியான புதிய அறிவிப்பு

0
754
IPL

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை தங்கள் தளத்தில் இலவசமாக பார்க்க முடியாது என ஜியோ சினிமா அறிவித்திருக்கிறது. மேலும் இதற்கு விலை நிர்ணயித்து புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை ஒளிபரப்புவதற்கான ஆன்லைன் உரிமத்தை ஜியோ சினிமா வாங்கி இருந்தது. மேலும் தொலைக்காட்சி உரிமத்தை ஹாட்ஸ்டார் வாங்கியிருந்தது. ஆனால் தங்களுடைய தளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை ரசிகர்கள் பார்க்க ஜியோ சினிமா ஆன்லைனில் இலவசமாக கொடுத்தது.

- Advertisement -

இணைந்த ஜியோ ஹாட்ஸ்டார்

இந்த நிலையில் 82 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின்படி ஜியோ சினிமா டிஸ்னி ஹாட் ஸ்டார் வாங்கி தங்களுடன் இணைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த இரண்டு தளங்களும் இனிமேல் இணைந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்தியாவில் விளையாடப்படும் இந்திய அணியின் மற்றும் உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர் ஆகியவற்றை இனி ஜியோ ஹாட்ஸ்டாரில் தான் பார்க்க முடியும்.

இப்படியான சூழ்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை தங்கள் தளத்தில் இலவசமாக பார்க்க கொடுத்து வந்த ஜியோ சினிமா தற்பொழுது ஜியோ ஹாட்ஸ்டார் ஆக மாறியதும் முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறது. இனி இலவசமாக பார்ப்பதற்கு முடியாது.

- Advertisement -

புதிய இரண்டு அறிவிப்புகள்

இனி ஐபிஎல் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் இல் பார்க்க வேண்டும் என்றால் 144 ரூபாய்க்கு புதிதாக கட்டணம் செலுத்தி சேர வேண்டும். ஏற்கனவே ஒருவர் ஹாட்ஸ்டாரில் சந்தாதாரராக இருந்தால் அவர் நேரடியாக பணம் ஏதும் கொடுக்காமல் இதில் இணைந்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் புதிதாக வரக்கூடியவர்கள் இனி இந்த தொகைக்கு சந்தா கட்டினால் மட்டுமே ஐபிஎல் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியும்.

இதையும் படிங்க : CT 2025 பரிசுத் தொகை அறிவிப்பு: 53 சதவிகிதம் உயர்த்திய ஐசிசி.. சாம்பியன் முதல் கடைசி அணி வரை பெறும் தொகை விபரம்

2025 ஆம் ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசன் மார்ச் 21 ஆம் தேதி முதல் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் போட்டியின் ஆரம்ப சில நிமிடங்கள் மட்டுமே இலவசமாக கிடைக்கும். அதற்கு மேல் 144 ரூபாய்க்கு சந்தா கட்டி இணைந்தால் மட்டுமே ஐபிஎல் தொடரை முழுமையாக பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -