காயம் இருந்தாலும் 5வது டெஸ்ட்டில் விளையாடியே தீருவேன் என்று அடம்பிடிக்கும் இங்கிலாந்து வீரர்

0
448
England Test Team

இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆக இந்த தொடர் விளையாடப்பட்டு வருகிறது. முதல் மூன்று போட்டியில் ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் மீண்டும் ஆஷஸ் கோப்பையை தங்களிடமே ஆஸ்திரேலியா தக்கவைத்துக் கொண்டது. கடந்த 2015ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து ஆஷஸ் கோப்பையை மீட்ட ஆஸ்திரேலிய அணி தற்போது வரை தங்கள் வசமே அதை வைத்துள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகளை வரிசையாக தோல்வியுற்றதும் பலரும் இங்கிலாந்து அணியை கடுமையாக சாடினர். குறிப்பாக கேப்டன் குட் தவிர வேறு யாரும் இங்கு அந்த அணியில் சொல்லிக் கொள்வது போல் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை என்று பலரும் குற்றம் சாட்டினர். இதனால் இங்கிலாந்து அணி 4வது டெஸ்ட் போட்டியில் ஓரளவு நன்றாக விளையாடி கடைசி நேரத்தில் தோல்வி வராமல் பார்த்துக் கொண்டது.

சிட்னி மைதானத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஜோ ரூட் அந்தளவு சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியை மீட்டனர். பேர்ஸ்டோ சதம் கடந்து அசத்தினார். அதேபோல ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் இரண்டு இன்னிங்சுகளிலும் அரை சதம் அடித்தார். கடைசி நேரத்தில் பிராட் மட்டும் ஆண்டர்சன் இணைந்து தோல்வியுறாமல் டெஸ்ட்டை டிரா செய்தனர்.

- Advertisement -

ஓரளவு இங்கிலாந்து அணி தற்போது தான் மீண்டு உள்ளது என்று அந்நாட்டு ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கும் போது தற்போது ஸ்டோக்ஸுக்கு தசை திரிபு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டோக்ஸை இழந்து ஐந்தாவது டெஸ்டுக்கு இங்கிலாந்து அணி எப்படி தயார் ஆகப்போகிறது என்று ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் தற்போது அந்த அணியின் சீனியர் பந்துவீச்சாளர் ஆண்டர்சன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் ஸ்டோக்ஸ் காயம் இருக்கின்ற போதும் ஐந்தாவது டெஸ்டில் விளையாடி ஆகியே வேண்டும் என்று மிகவும் உறுதியுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. முக்கிய வீரர் காயத்தால் அவதியுற்றாலும் ஐந்தாவது டெஸ்டில் விளையாடி ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருப்பதை நினைத்து அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -
- Advertisement -