இந்திய அணி இல்லை.. என்னோட கம் பேக் நிச்சயம் இந்த அணிக்காகத்தான் – முகமது ஷமி அறிவிப்பு

0
489
Shami

உலகக் கிரிக்கெட்டில் தற்போது வேகப் பந்துவீச்சாளர்களில் மிகவும் தனித்துவம் கொண்டவராக இந்திய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இருக்கிறார். இந்த நிலையில் காயத்திற்கு பிறகு தன்னுடைய கம்பேக் எப்பொழுது என்பது குறித்து முகமது ஷமி கூறியிருக்கிறார்.உலகக் கிரிக்கெட்டில் தற்போது வேகப் பந்துவீச்சாளர்களில் மிகவும் தனித்துவம் கொண்டவராக இந்திய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இருக்கிறார். இந்த நிலையில் காயத்திற்கு பிறகு தன்னுடைய கம்பேக் எப்பொழுது என்பது குறித்து முகமது ஷமி கூறியிருக்கிறார்.

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முகமது ஷமி கணுக்காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு சிகிச்சை செய்து கொண்டே விளையாடினார். இதன் காரணமாக அவரது காயம் பெரியதாக மாறியது.

- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என தன்னுடைய காயத்தை பொறுப்பெடுத்தாமல் விளையாடியதால் முகமது ஷமி பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது. லண்டனில் அறுவை சிகிச்சை முடிந்து மறு வாழ்வில் இருந்து வந்த அவர் தற்பொழுது மெது மெதுவாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி செப்டம்பர் 19ஆம் தேதி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில் திலீப் டிராபிக்கு அறிவிக்கப்பட்ட அணியில் முகமது ஷமி பெயர் இடம் பெறவில்லை. எனவே அவர் மீண்டும் இந்திய அணிக்கு எப்போது திரும்புவார்? என்கின்ற கேள்விக்குறி இருந்து வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து இலங்கை சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன் பேசிய தேர்வு குழு தலைவர் அகர்கர் “பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் துவங்கும் செப்டம்பர் 19ஆம் தேதிதான் அவருக்கான இலக்காக நாங்கள் வைத்திருந்தோம். ஆனால் தற்பொழுது அவரது உடல்நிலை எந்த அளவுக்கு தேறி இருக்கிறது என்பது குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் கேட்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க : பாகிஸ்தானில் பங்களாதேஷ் அணி புகார்.. இந்த விஷயம் மோசமா இருக்கு.. வினோத குற்றச்சாட்டு

இந்த நிலையில் இது குறித்து முகமது ஷமி கூறும் பொழுது ” நான் இந்திய அணிக்கு திரும்புவதற்கும் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். ஆனால் நான் இந்திய அணிக்கு சென்று விளையாடுவதற்கு முன்பாக பெங்கால் அணிக்காக விளையாடுவதை நீங்கள் பார்ப்பீர்கள். நான் குறைந்தது இரண்டு அல்லது மூன்று போட்டிகள் பெங்கால் அணிக்காக விளையாடி இந்திய அணிக்கு செல்வேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -