2வது டெஸ்டில் சிக்கல்; முக்கிய வீரரை நீக்கி அதிரடி முடிவெடுத்த பிச்சிஐ! – என்ன நடக்கிறது?

0
6096

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக நீக்கப்பட்டிருக்கிறார்.

ரஞ்சிக்கோப்பை 2022-23 சீசன் தற்போது பைனல் போட்டியை நெருங்கியுள்ளது. நடைபெற்ற முதல் செமி பைனலில் மத்திய பிரதேஷ் அணியே அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பெங்கால் அணி நுழைந்துள்ளது. இரண்டாவது செமி பைனலில் கர்நாடகா அணியை வீழ்த்தி சௌராஷ்ட்ரா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

- Advertisement -

இந்த சௌராஷ்டிரா அணிக்காக இறுதிப்போட்டியில் விளையாட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜெயதேவ் உனட்கட் நீக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே இந்த அணிக்கு கேப்டனாக உனட்கட் இருந்திருக்கிறார். மீண்டும் ஒருமுறை கேப்டனாக பொறுப்பேற்று இறுதிப்போட்டியை விளையாட உள்ளார்.

இந்தாண்டு ரஞ்சிக்கோப்பை சீசனில் மூன்று போட்டிகள் மட்டுமே உனட்கட் விளையாடினார். அதன்பிறகு வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்று விட்டார். பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றிருந்ததால், அதன் பயிற்சிக்காகவும் சென்று விட்டார்.

தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான திட்டத்தில் உனட்கட் இல்லை என்பதால், ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சேர்ந்து இவரை ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட ரிலீஸ் செய்வதற்கு முடிவு செய்தனர். இந்த முடிவிற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்திருக்கிறது.

- Advertisement -

ஆகையால் விரைவில் ரஞ்சிக்கோப்பை இறுதி போட்டியில் விளையாடுவதற்கு ஜெயதேவ் உனட்கட் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நீக்கம் நிரந்தரம் இல்லை மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் அணிக்கு திரும்புவார் என்றும் தெரியவந்துள்ளது.