“ஐபிஎல் இல்ல டி20 உலககோப்பையும் ரிஷப் பண்ட் விளையாடுவார்.. ஆனா இத செஞ்சா போதும்” – ஜெய் ஷா அறிவிப்பு

0
266
Pant

இந்தியாவில் மே மாதம் இறுதியில் 17 வது ஐபிஎல் சீசன் முடிந்ததும் ஜூன் மாதம் ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரு நாடுகளில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு, இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி சர்வதேச போட்டிகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. கடைசியாக உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடியிருந்தது.

- Advertisement -

மேலும் இந்திய டி20 அணிக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 14 மாதங்கள் கழித்து திரும்பி வந்திருக்கின்ற காரணத்தினால், எப்படியான பேட்டிங் யூனிட்டை டி20 உலகக்கோப்பைக்கு தேர்ந்தெடுப்பது என்கின்ற குழப்பமும் இருக்கிறது.

இதைவிட முக்கியமாக நடக்க இருக்கின்ற டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியின் இரண்டு விக்கெட் கீப்பர்கள் யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. ஜிதேஷ் சர்மா இந்திய அணிக்காக சமீபத்தில் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடியிருந்தாலும், இன்னும் அவருடைய இடமும் உறுதிப்படுத்தப்படாமலே இருக்கிறது.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கி கிரிக்கெட் விளையாட முடியாமல் இருந்து வரும் இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தற்பொழுது உடல்நிலை தேறி உடல் தகுதி சான்றிதழ் பெற்றிருக்கிறார். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனலையில் அவரை டி20 உலக கோப்பைக்கு விக்கெட் கீப்பராக தேர்வு செய்வார்களா? என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

- Advertisement -

அதாவது ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக கேப்டன் பொறுப்பையும் விக்கெட் கீப்பிங் பொறுப்பையும் செய்து, ஓரளவுக்கு அதில்செயல்பாட்டை வெளிப்படுத்தினால், டி20 உலக கோப்பை இந்திய அணியில் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமா? என்பதுதான் கேள்வியாக இருந்தது.

இதையும் படிங்க : சரியான நேரத்தில் ரகானே செய்த சம்பவம்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி.. ரஞ்சி டிராபி பைனலில் மும்பை முன்னிலை

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறும் பொழுது ” ரிஷப் பண்ட் நன்றாக பேட்டிங் செய்கிறார் மற்றும் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்கிறார். விரைவில்அவர் உடல் தகுதியோடு இருக்கிறார் என்று அறிவிப்போம். அவர் எங்களுக்காக டி20 உலக கோப்பையில் விளையாடினால் அது பெரிய விஷயம். அவர் எங்களுக்கு பெரிய சொத்து. அவர் விக்கெட் கீப்பிங் செய்தால் நிச்சயம் டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியும். அதற்கு முன்னால் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார்” என்று பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.