வெறும் 9 விக்கெட்.. பும்ராவுக்காக காத்திருக்கும் மெகா சாதனைகள்.. ஆஸி 4வது டெஸ்ட்.. முழு விபரம்

0
1040

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக கருதப்படும் வேக பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் பும்ரா ஒரு சிறப்பான சாதனையை படைக்க இன்னும் அவருக்கு ஒன்பது விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படும் நிலையில் அது என்ன சாதனை என்று பார்க்கலாம்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் வீழ்த்தினார். அதற்குப் பிறகு நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் என இந்தத் தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

இந்த நிலையில் வருகிற 26 ஆம் தேதி மெல்போர்னில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி வெற்றி பெற கடினமாக முயற்சிக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்த சூழ்நிலையில் பும்ரா இந்தத் தொடரில் சிறந்த சாதனைகளை படைக்க இருக்கிறார். அதாவது இந்தத் தொடரில் மொத்தமாக 21 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் நிலையில் அவருக்கு இன்னும் 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.

- Advertisement -

பும்ரா படைக்கப் போகும் சாதனை

எனவே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அந்த ஒன்பது விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினால் இந்தத் தொடரில் 30 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைப்பார். இதற்கு முன்னர் ஹர்பஜன் சிங் 2000-2001ம் ஆண்டில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி சார்பாக 32 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். எனவே பும்ரா 30 விக்கெட்டுகள் கைப்பற்றினால் உலகின் சிறந்த இரண்டாவது பந்துவீச்சாளராக மாறுவார்.

இதையும் படிங்க:பிசிசிஐ ராகுலுக்கு இத மட்டும் செய்யாதீங்க.. ஏன்னா அவர் என்ன செய்றார்னு பாக்கணும் – தினேஷ் கார்த்திக் பேட்டி

2004 மற்றும் 2005 ஆம் ஆண்டில் கும்ப்ளே 27 விக்கெட்டுகள் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 2022-23ம் ஆண்டில் 26 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பும்ரா அடுத்த போட்டி நடைபெற உள்ள மெல்போர்ன் மைதானத்தில் இதுவரை 15 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்று கும்பிளேவை மிஞ்சுவார். இன்னும் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினால் இந்த மைதானத்தில் மிக நீண்ட வடிவத்தில் 20 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

- Advertisement -