பிசிசிஐ ராகுலுக்கு இத மட்டும் செய்யாதீங்க.. ஏன்னா அவர் என்ன செய்றார்னு பாக்கணும் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
51

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடும் நிலையில் இதுவரை இரண்டு அணிகளும் 1-1என்ற கணக்கில் இருக்கின்றன.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கேஎல் ராகுல் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கேஎல் ராகுல் அபாரமான ஆட்டம்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்திருக்கும் நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி வருகிற 26ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் கேஎல் ராகுல் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் பொறுப்பை தனது கையில் எடுத்துக் கொண்டு எந்த பந்தை விட வேண்டும், எந்த பந்தை அடித்து ஆட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் கேஎல் ராகுல் இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் அவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவருக்கான வாய்ப்பை வழங்க வேண்டும்

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “நான் நம்புகிறேன் கே.எல். ராகுலிடம் இந்தியாவுக்கு தேவையான தொடக்க ஆட்டக்காரர் நிச்சயமாக இருக்கிறார். அவருக்கான ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறேன்.அவர் ஏதேனும் ஒரு தொடரில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அவர் என்ன செய்தார், என்ன செய்கிறார் என்பதை ஆராய்ந்து அவருக்கான வாய்ப்பினை வழங்க வேண்டும். ஏனென்றால் அவர் ஒரு நீண்ட காலத்திற்கான கிரிக்கெட் வீரர்.

இதையும் படிங்க:நான் 5 சிக்ஸ் அடிச்ச பிறகுதான் எனக்கு அது நடந்துச்சு.. என்னோட திட்டம் இப்போ இது மட்டுமே – ரிங்கு சிங் பேட்டி

மக்கள் அவரது நிலைத்தன்மை குறித்து புகார் கூறுகிறார்கள். ஆனால் நான் அந்த வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை. அவரது புள்ளி விவரம் சரியாக இல்லை என்றாலும் அவர் அதைவிட சிறந்த வீரர். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் சிறந்த வீரரை தேர்வு செய்தால் அதில் அவர் நிச்சயமாக இடம் பெறுவார். ஏனென்றால் அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்பது நன்றாக தெரியும்” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். இனி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளிலும் கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்

- Advertisement -