11 ஓவர்.. 10 விக்கெட்.. பங்களாதேசை பந்தாடிய மந்தனா ஷபாலி.. பைனலில் இந்திய அணி.. மகளிர் ஆசிய கோப்பை 2024

0
419
Smriti

தற்போது இலங்கையில் மகளிர் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இன்று இந்த தொடரில் முதல் அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி அனாயசமாக பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. பங்களாதேஷ் வீராங்கனைகள் இந்த முடிவுக்கு ஏற்றபடி விளையாடவில்லை. அந்த அணியில் மொத்தம் எட்டு வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

பங்களாதேஷ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் நிகர் சுல்தானா மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 51 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் வந்த சொர்னா அக்டர் 18 பந்துகளில் 19 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் ரேணுகா சிங் 4 ஓவர்கள் பந்துவீசி 1 மெய்டன் உடன் 10 ரன்கள் மட்டுமே விட்டு தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். ராதா யாதவ் 4 ஓவர் பந்துவீசி ஒரு மெய்டன் உடன் 14 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து அவரும் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வருமா இருவரும் வந்தார்கள். எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்த ஜோடி எந்தவித அழுத்தத்தையும் எதிர்கொள்ளாமல் அனாயசமாக பங்களாதேஷ் வீராங்கனைகளின் பந்துவீச்சை விளாசி தள்ளியது.

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி விக்கெட்டை இழக்காமல் 11ஓவர்களில் இலக்கை எட்டி பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை அபார வெற்றி பெற வைத்தது. ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 55 ரன்கள் ஷபாலி வர்மா 28 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க : என்னுடைய கேப்டன்சி இவர் போலதான் இருக்கும்.. 10 வருஷம் இதுக்காக கஷ்டப்பட்டு இருக்கேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி

இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணியுடன் மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -