இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிக்கு ரோகித் சர்மாவிற்கு பதிலாக பும்ரா கேப்டனாக தலைமை வகிக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கிரிக்கெட்டில் தமது எதிர்கால திட்டம் குறித்து பும்ரா சில முக்கிய தகவல்களை கூறி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு பல்வேறு போட்டிகளை தனி மனிதனாக நின்று வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணியிடமிருந்து போட்டி கைவிடப்பட்ட சூழ்நிலையிலும் தனிமனிதனாக நின்று தமது பந்துவீச்சின் மூலம் இழந்த போட்டியை மீண்டும் மீட்டெடுத்தார்.
தற்போது நடைபெற்ற ஒரு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் தனி மனிதனாகவே இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகள் வீழ்த்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது அடுத்ததாக விளையாட உள்ள சிட்னி டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக பதவியேற்க உள்ள பும்ரா சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததும் மக்கள் உங்களை எப்படி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பும்ரா “அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை அந்த விஷயங்கள் என் கட்டுப்பாட்டிலும் இருக்காது. ஏனென்றால் அந்த கதைகள் எனது கட்டுப்பாட்டில் இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் முழுவதுமாக கவனம் செலுத்த விரும்புகிறேன். நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் போது நான் என்னை நானே கேட்டுக் கொள்ளக் கூடிய விஷயம் இதுவாக இருக்கும். அது என்னவென்றால், என்னிடமிருந்த எல்லா விஷயங்களிலும் நான் முழுமையாக என்னால் முடிந்த சிறப்பானதை கொடுத்தேனா மற்றும் கொடுக்க முயற்சி செய்தேனா என்பது மட்டும்தான்.
இதையும் படிங்க:கம்பீருக்கு அவ்ளோ அதிகாரம் இல்லை.. அவர் இதை ரோகித்துக்கு செஞ்சிருக்கணும் – இந்திய முன்னாள் வீரர் பேட்டி
நான் அப்படி என்னால் முழுவதுமாக செய்ய முடிந்து அந்த விஷயம் காலியாக இருக்கும்போது பிறகு நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்” என்று பும்ரா கூறியிருக்கிறார். இனி டெஸ்ட் போட்டிகளில் அடுத்த கேப்டனாக பும்ராவே தலைமை தாங்குவார் என்று கருத்துக்கள் பரவி வருகின்றன. ரோகித் சர்மா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கும் நிலையில் முழுவதுமாகவே டெஸ்ட் தொடரில் இருந்து விலகுகிறாரா அல்லது அடுத்த போட்டிக்கு மட்டுமா என்பது மிக விரைவாக தெரிய வரும். எனவே பும்ரா இனி கேப்டனாகவும் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.