கம்பீருக்கு அவ்ளோ அதிகாரம் இல்லை.. அவர் இதை ரோகித்துக்கு செஞ்சிருக்கணும் – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

0
409

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணி கடுமையாக உழைத்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன்லால் ரோகித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிட்னி டெஸ்ட் போட்டி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இருந்து ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக தலைமை தாங்கினார். ஆனால் அதற்குப் பிறகு ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டி டிரா என மோசமான நிலைமையில் இருக்கிறது.

மேலும் இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி இரண்டுமே மிக மோசமாக இருக்கும் நிலையில் அவர் தற்போது இந்திய அணியில் இருந்து விலகி இருக்கிறார். எனவே அடுத்த டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பும்ரா தலைமை தாங்குவார் என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன்லால் ஒரு வீரரை நீக்குவதற்கு அணியின் பயிற்சியாளருக்கு அவ்வளவு பெரிய அதிகாரம் இல்லை என்றும் கம்பீர் மற்றும் ரோஹித் இது குறித்து ஒன்றாக முடிவெடுத்து இருக்க வேண்டும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பயிற்சியாளருக்கு அவ்வளவு அதிகாரம் இல்லை

இது குறித்து முதல் நாள் கூறும் பொழுது “ரோகித் ஒரு இந்திய அணியின் கேப்டன். எனவே ஒரு பயிற்சியாளராக நிர்வாகமாக அவர்கள் அனைவரும் அமர்ந்து ஒரு முடிவை எடுக்கலாம். நாட்டுக்காக விளையாடும்போது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஒருவரை இறக்கி விடும் அளவிற்கு பயிற்சியாளருக்கு அவ்வளவு அதிகாரம் இல்லை. அவர்கள் ஆலோசனை செய்ய வேண்டும் இல்லையா? ஒரு அணி என்பது கேப்டனாள் மட்டும் உருவாகாது.

இதையும் படிங்க:அஸ்வின் விஷயத்தில் ஏமாற்றம்.. பிசிசிஐ பெரிய பிளேயர்ஸ்க்கு இந்த திட்டத்தை கொண்டு வரணும் – கும்ப்ளே பேட்டி

பயிற்சியாளர் மற்றும் கேப்டன் என இருவரும் இணைந்து தான் அணியை உருவாக்குகிறார்கள் இல்லையா. ரோஹித் விளையாடலாமா இல்லையா என்பதை அவர் மட்டுமே முடிவெடுக்க முடியும். அவர் மீண்டும் தனது வேலையை செய்து இந்திய அணிக்கு திரும்ப முடியும். இதற்கு நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது உங்கள் நம்பிக்கையை பொறுத்தது. உங்களை முன்னோக்கி செலுத்த முடியவில்லை என்றால் மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம். எனவே இது ரோஹித் சர்மா மட்டுமே முடிவெடுக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -