கடந்த வாரம் சனிக்கிழமை டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் நேற்று இந்தியா வந்த இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. இந்த நிகழ்வில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா தன்னுடைய ஓய்வு பற்றிய கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.
இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரை வென்றதில் முதல் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து பேச்சாளர் பும்ராவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இந்திய அணிக்கும் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொண்ட மற்ற அணிகளுக்கும் ஒரே வித்தியாசமாக பும்ரா மட்டுமே இருந்தார்.
அவருடைய கணிக்க முடியாத அபார வேகப்பந்து வீச்சின் காரணமாக, அவர் வீசக்கூடிய நான்கு ஓவர்களும் எதிரணியிடமிருந்து போட்டியை இந்திய அணிக்கு மாற்றுவதாகவே இருந்து வந்தது. பாகிஸ்தான் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இதை வெளிப்படையாக இந்தத் தொடரில் பும்ரா செய்து காட்டினார்.
தற்பொழுது நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் பும்ராவிடம் அவரது ஓய்வு குறித்த கேள்வியும் கேட்கப்பட்டது. மேலும் அவர் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடர் எப்படியான அனுபவமாக இருந்தது என்பது குறித்தும் வெளிப்படையாகக் பேசியிருக்கிறார். மேலும் ரசிகர்களுக்கு அதில் மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்திருக்கிறார்.
இன்று பும்ரா பேசும் பொழுது “எனது ஓய்வு வெகு தொலைவில் இருக்கிறது நான் இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறேன். இது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த மைதானம் என் வாழ்க்கையில் அற்புதமானது. நான் இங்கு 19 வயது சிறுவனாக வந்தேன். இது போன்ற எதையும் நான் இதற்கு முன்னால் பார்த்தது கிடையாது. ஆட்டத்திற்கு பின்னான உணர்வுகளை இதுபோன்று நான் வேறு எங்கும் அனுபவித்ததும் இல்லை.
இதையும் படிங்க : 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில்.. ரோகித்தை அப்படி பார்த்ததே இல்லை.. அதை மறக்கவே முடியாது – விராட் கோலி பேட்டி
எங்களிடம் அனுபவம் வாய்ந்த ஒரு அணி இருந்தது. மேலும் எங்கள் வீரர்களிடம் பெரிய தன்னம்பிக்கை இருந்தது. அவர்கள் போட்டியை எந்த நேரத்திலும் எதிர் அணியின் கழுத்தை நெரித்து பறித்து வரக்கூடியவர்களாக இருந்தார்கள். இந்தவகையில் மிகவும் நான் அதிர்ஷ்டசாலி. இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். நாங்கள் இதற்கு முன் சேர்ந்து உலகக் கோப்பையை வென்றது இல்லை. இந்த உலகக் கோப்பை வெற்றி எங்களுக்கு உந்துதலாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.