15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில்.. ரோகித்தை அப்படி பார்த்ததே இல்லை.. அதை மறக்கவே முடியாது – விராட் கோலி பேட்டி

0
2143
Virat

இந்திய அணி ஒரு உலகக் கோப்பை தொடரை 13 ஆண்டுகள் கழித்து வென்றதற்கு வெற்றி கொண்டாட்டங்கள் தற்பொழுது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்த வெற்றி விழாவில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மிகவும் உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார்.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடர் விராட் கோலிக்கு சிறப்பாக அமையவில்லை. இருந்த போதிலும் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவருமே விராட் கோலியை தொடர்ந்து துவக்க வீரராக வருவதற்கு அனுமதி கொடுத்து நம்பினார்கள். இருவருமே விராட் கோலி முக்கிய நேரத்தில் அணிக்கு தேவையானதை செய்வார் என்று கூறியிருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கூறியபடியே விராட் கோலி இறுதிப்போட்டியில் தனி ஆளாக 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணி வெற்றி பெறுவதற்கான முக்கிய அடித்தளத்தை தன்னுடைய அறிவுப்பூர்வமான பேட்டிங் மூலம் உருவாக்கினார். ஒவ்வொருவரும் உலக கோப்பை வெற்றியில் ஒரு பங்கை கொண்டிருக்க, விராட் கோலியும் ஒரு முக்கி பங்கை வதித்திருக்கிறார்.

இன்று வெற்றி கொண்டாட்டத்தில் விராட் கோலி பேசும் பொழுது ” நானும் ரோகித் சர்மாவும் இந்திய அணிக்கு கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக இணைந்து விளையாடி வருகிறோம். ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்தது இதுவே முதல் முறை. அவர் அழுதார் நானும் அழுதேன். இந்தத் தருணங்களை என்னால் மறக்கவே முடியாது. அந்த நாளையும் என்னால் மறக்க முடியாது.

- Advertisement -

ரோகித் சர்மா மற்றும் என்னை பொறுத்தவரையில் நாங்கள் இருவருமே இந்தியாவுக்காக எப்படியும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினோம்.உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வருவது மிகவும் சிறப்பான ஒரு உணர்வு.

இதையும் படிங்க : உலக கோப்பைக்கு ரோகித் செய்த செயல்.. மிட்சல் மார்ஸ்க்கு பதிலடி.. எவ்வளவு ஏக்கம் மனுஷனுக்கு இருந்திருக்கும்

இறுதிப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு, நான் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு ரோஹித் சர்மா அழுது கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நானும் அழுது கொண்டிருந்தேன். இது ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக எங்களுக்கு அமைந்தது. இந்த நிகழ்வுகளை வாழ்க்கையில் எப்பொழுதும் மறக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -