நாயகன் மீண்டும் வரான்… வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை; மீண்டும் எப்போது அணிக்குள் வருவார் – பும்ராவை பற்றி அப்டேட் கொடுத்த பிச்சிஐ!

0
588

அறுவை சிகிச்சைக்கு பின் பும்ராவை பற்றி வெளியான தகவலில், மீண்டும் எப்போது பந்துவீசுவார் என தெரியவந்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவிற்கு கடந்த ஓராண்டு காலம் கடும் சோதனையாகவே இருந்திருக்கிறது. காயத்தினால் ஆசிய கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பை தொடர் என எதிலும் விளையாடவில்லை.

- Advertisement -

ஆசியக்கோப்பை தொடருக்கு முன்பு ஏற்பட்ட காயத்தினால் கிட்டத்தட்ட ஒன்றரை மாதகாலம் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். அதன் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பிய பும்ரா, செப்டம்பர் மாதம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின்போது மீண்டும் ஒருமுறை முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினார்.

அந்த சமயத்தில் தான் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இருந்தார். அதற்குள் குணமடைய முடியாது தெரிந்ததால், பின்னர் பிசிசிஐ இவரது பெயரை நீக்கி ஷமியை மாற்று வீரராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதம் இவரது உடல்நிலை முழுமையாக குணமடைந்துவிட்டது என்று இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமி தரப்பிலிருந்து தகவல்கள் கூறப்பட்டது. ஆனாலும் கடந்த முறைபோல பும்ரா காயம் விஷயத்தில் அவசரம் கட்டவேண்டாம் என தேர்வுக்குழு கூடுதல் ஓய்வை பும்ராவிற்கு அளித்தது.

- Advertisement -

ஓய்வு நேரங்களில் வலைபயிற்சியில் ஈடுபட்ட பும்ரா மீண்டும் காயமடைந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காயத்திற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என தெரிவித்தனர். இதனால் வருகிற ஐபிஎல் சீசனில் பும்ராவால் விளையாடமாட்டார் என தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று இவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு வந்த தகவலின்படி, பும்ரா முழுமையாக குணமடைந்து பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் எடுக்கலாம். அதுவரை எந்தவித சர்வதேச போட்டிகளிலும் இவரால் பங்கேற்க முடியாது என தெரிவித்தனர்.

இதனால் இந்த வரும் நடக்கவுள்ள ஆசிய கோப்பை தொடரிலும் இவரால் விளையாட முடியாது என கூறப்படுகிறது. இவரை வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் விளையாட வைக்க பிசிசிஐ முனைப்பு காட்டுகிறது.