அவசரப்படாதிங்க.. கம்பீர் இந்த விஷயத்துல பெரிய மாஸ்டர்.. இதை நிச்சயம் செய்வார் – ராபின் உத்தப்பா கருத்து

0
95
Gambhir

இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் முன்னணி வீரர்களுடன் களம் இறங்கிய இந்திய அணி தொடரை இழந்து அதிர்ச்சி கொடுத்தது. இந்த தோல்வியின் காரணமாக கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பின் மீது வெளியில் இருந்து நிறைய விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கம்பீர் அணிக்குள் என்ன மாதிரியான விஷயங்களை கொண்டு வருவார்? என்பது குறித்து ராபின் உத்தப்பா பேசியிருக்கிறார்.

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு முதன்முதலாக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் கம்பீர் பொறுப்பேற்றார். அந்தத் தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என இந்திய அணி மிகச் சிறப்பான முறையில் விளையாடி கைப்பற்றியது.

- Advertisement -

இந்த நிலையில் ஓய்வில் இருந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு பயிற்சியாளர் கம்பீர் வற்புறுத்தி அழைத்து வந்தார். இருந்தபோதிலும் கூட இந்திய அணி அந்தத் தொடரில் வெற்றி எதுவும் பெறாமல் தோல்வியடைந்தது.

இப்படியான சூழ்நிலையில் கம்பீர் கேப்டன்சி கீழ் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடிய இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, கம்பீர் ஒரு தலைவராக அணிக்குள் என்ன மாதிரியான விஷயங்களை உருவாக்கக் கூடியவர் அவருடைய சிறப்பு என்னவென்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறும் பொழுது “கம்பீர் எப்பொழுதும் முக்கிய வாய்ப்புகளை தேடி அவற்றைக் கைப்பற்ற முயற்சி செய்யக் கூடியவர். கம்பீர் ஒரு தலைவராக வீரர்கள் செழித்து வளர்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவார் என்பதற்கு என்னால் உறுதி தர முடியும். அவர் என்ன மாதிரியான ஒரு தலைவர் என்றால், கேப்டன் என்பதை விட அவர் திட்டங்களை மிகச் சிறப்பாக திட்டக்கூடிய தந்திரோபாயவாதி. எப்பொழுதும் அவர் வீரர்களுக்கான தலைவர்.

இதையும் படிங்க : நான் அசிங்கமா நடந்துக்கிட்டேனா.. சரத்குமார் என் பையன்யா.. நடந்தது இதுதான் – அஸ்வின் விளக்கம்

மேலும் அவர் அணிக்குள் வெற்றியை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தை வளர்க்க கூடியவர். தன்னுடைய அணி வீரர்களுக்கு சிறந்த பாதுகாப்பை கொடுப்பார். அனுபவபூர்வமாக அவருடைய செயலில் இதை பார்த்திருக்கிறோம். அவர் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக இருந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து கொடுப்பதற்கு அவர் முயற்சி செய்வார்.என்னை பொறுத்த வரையில் இந்த அணிக்குள் ஒரு தலைவராக இருப்பதற்கான குணங்களை அவரிடம் பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -