பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால அவமானப்படுத்தப்பட்டேன் என ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி கூறியிருக்கிறார். இவர் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு தலைமை பயிற்சியாளாராக இருந்து பிறகு ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டில் மிகப்பெரிய குழப்பநிலையில் இருந்த பொழுது தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிரிஸ்டன் பாகிஸ்தான் வெள்ளை பந்து அணிகளுக்கும், ஜேசன் கில்லெஸ்பி பாகிஸ்தான் சிவப்பு பந்து அணிக்கும் தலைமை பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டார்கள்.
இந்த நிலையில் இவர்களில் முதலில் கேரி கிரிஸ்டன் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார். பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி பயிற்சியின்போது அவரது பேச்சைக் கேட்காமல் அவமானப்படுத்தியதாக செய்திகள் வெளிவந்தது. பிறகு இது குறித்து அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்ததாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து சில மாதங்களில் தான் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும். தனக்கு சரியான ஒத்துழைப்பு பாகிஸ்தான் வாரியத்திடம் இருந்து கிடைக்கவில்லை என்றும் கூறி அவர் வெளியேறினார். இதற்கு அடுத்த சில மாதங்களில் ஜேசன் கில்லெஸ்பி வெளியேறினார். தற்போது இதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “என்னுடைய இருந்த மூத்த உதவி பயிற்சியாளர் நீக்கப்பட்டார். ஆனால் அது குறித்து எனக்கு எந்த வித செய்தியும் தெரியாது. இப்படி நான் அவமானப்படுத்தப்பட்டேன். அதே சமயத்தில் கேரி கிரிஸ்டன் கூட்டாக பயிற்சி செய்யும் முறையை முன்வைத்தார். இதற்கான கூட்டத்தில் கலந்துகொள்ள நான் ஆஸ்திரேலியாவில் இருந்தும், அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்தும் விமானத்தின் மூலம் வந்தோம்”
இதையும் படிங்க : 3 ஃபார்மெட்டிலும் திறமை உள்ள வீரருக்கு.. விளையாடவே வாய்ப்பு கொடுக்காதது பெரிய அவமானம் – இந்திய முன்னாள் கேப்டன்
“ஆனால் இந்த கூட்டத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மேன் முஹசின் நக்வி ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டார். அவர் அப்போது லாகூரில்தான் இருந்தார். அங்கிருந்து கூட்டத்திற்கு வர அவருக்கு 20 நிமிடங்கள் போதும். ஆனால் அந்த நேரத்தைக் கூட அவர் செலவு செய்ய விரும்பவில்லை என்று எங்களுக்கு புரிந்தது. அதற்குப் பிறகுதான் நாங்கள் விலகி வெளியில் வந்து விட்டோம்” என்று கூறி இருக்கிறார்.