இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தாலும் ஒரு சில சமயங்களில் இடமின்மை காரணத்தால் சிறந்த வீரர்கள் கூட அணிக்கு வெளியே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்கர்சர்கார் மூன்று வடிவத்திலும் சிறந்த திறமை இருக்கும் ஒரு இந்திய வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சையது முஸ்தாக் அலி, விஜய் ஹசாரே, துலீப் டிராபி மற்றும் ஐபிஎல் தொடர் போன்ற இந்திய உள்நாட்டு தொடர்களால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏராளமான இளம் திறமையான வீரர்கள் தொடர்ந்து கிடைக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு சில தொடர்களில் விளையாடுகிறார்கள் தவிர அதற்குப் பிறகு நிலையான இடத்தை அவர்களால் பெற முடிவதில்லை.
அதற்கு சரியான எடுத்துக்காட்டாக இளம் வீரர் சர்பராஸ் கானை கூறலாம். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி சதம் அடித்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதற்குப் பிறகு இந்திய அணியில் அவரால் தொடர்ந்து இடம் பிடிக்க முடியவில்லை. மாறாக தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் கோவா அணிக்கு எதிராக 157 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் 14 சிக்ஸர்கள் அடங்கும். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு சிஎஸ்கே அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் திலீப் வெங்கட் சர்க்கார் இவர் இடம் பெறாத குறித்த சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “உங்களுக்கு தெரியுமா? விஷயம் என்னவென்றால் அவர் இந்திய அணிக்காக எந்த வடிவத்திலும் தேர்வு செய்யாதது எனக்கு குழப்பமாக இருக்கிறது. அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் எல்லாம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக தரம்சாலாவில் படிக்கல் உடன் சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியது நினைவிருக்கலாம். அதுதான் இறுதியில் இந்திய அணி வெற்றி பெற உதவியது.
இதையும் படிங்க:2026 மாஸான அட்டவணை.. இந்திய அணி விளையாடப் போகும் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளின் முழு பட்டியல்.. விவரம் இதோ
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு அவருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. நிச்சயமாக அவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது எனக்கு குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அவர் அனைத்து வடிவங்களிலும் விளையாடக்கூடிய ஒரு நல்ல வீரர். ஆனால் அத்தகைய திறமை புறக்கணிக்கப்பட்ட வருவது பெரிய அவமானம்” என்று பேசி இருக்கிறார்.






