8வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் இங்கிலாந்து அபாரம்.. இந்தியாவுக்கு நெருக்கடி..வில்லனாகும் ஜெமி ஸ்மித்

0
124

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் இருந்ததால் இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோன்று முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்தாலே அது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு சாதகமாக இருக்கும். இந்த சூழலில் இங்கிலாந்து அணி 251 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி தொடங்கியது. ஜோ ரூட் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தார்.

- Advertisement -

ஜோ ரூட் 37வது சதம்:

ஜோ ரூட், தன்னுடைய 37 வது சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் இருந்த போது பும்ரா அடுத்தடுத்து இரண்டு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜோ ரூட் 104 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 271 ரன்கள் ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இங்கிலாந்து அணியை 300 ரன்களுக்கு சுருட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெமி ஸ்மித் மற்றும் பிரைடன் கர்ஸ் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினர். இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் சேர்த்து இந்திய பந்துவீச்சை அபாரமாக எதிர் கொண்டனர்.

- Advertisement -

ஜெமி ஸ்மித் அரைசதம்:

வழக்கம்போல் அதிரடியாக ஆடிய ஜெமி ஸ்மித் 54 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டர்கள் அடங்கும். இதே போன்று கர்ஸ்  66 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். இதனால் 106 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் அளப்பருக்கு 354 எண்கள் எடுத்திருந்தது.

இதை பாருங்க: 3வது டெஸ்டில் ஜோ ரூட் சாதனை சதம்.. ஸ்மித், டிராவிட் சாதனை முறியடிப்பு.. பும்ராவும் புதிய உச்சம்

இந்தத் தொடரில் ஜமி ஸ்மித் மூன்று அரை சதம் அடித்திருக்கின்றார். இந்த ஜோடி எட்டாவது விக்கட்டுக்கு 84 ரன்கள் சேர்த்து இருக்கிறது. தனி ஆளாக நின்று சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி ஜெமி ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார்.

- Advertisement -